இரண்டாம் உலகப் போரில் பர்மாவில் நிகழ்ந்த சப்பானிய படையெடுப்பாலும் பர்மியப் புரட்சியாலும் உயிருக்கு அஞ்சி தமது சொத்துகளை விட்டுவிட்டு செட்டியார்கள் தமிழ்நாட்டுக்கும் பிற உலக நாடுகளுக்கும் தப்பிச் சென்றனர்..
பின்னர் 1952 ம் ஆண்டு பர்மா விடுதலை அடைந்த பிறகு அமைந்த பர்மிய அரசு பர்மிய நிலங்கள் அனைத்தையும் அரசுடைமையாக்கியது..பர்மாவில் 10 லட்சம் ஏக்கர் நிலங்களை வைத்திருந்த செட்டியார்களுக்கு இது பேரிடியாக இருந்தது..
பர்மிய பிரதமர் ஊனு ஆட்சியிலிருந்த போது இளையாத்தாங்குடியைச் சார்ந்த வெள்ளையன் செட்டியார் என்பவர் பர்மாவில் நாடாளுமன்ற உறுப்பினர்.. இருவருக்கும் இருந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி தங்கள் சொத்துகளை மீட்டிட செட்டியார்கள் தரப்பு தீவிரமாக வேலை செய்தது..
ஒருவழியாக சொத்துகளுக்கு இழப்பீடு வழங்க ஊனு ஒத்துக் கொண்டார்..ஆனால் அதற்கான தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வெள்ளையன் செட்டியார் இந்து மாமன்றம் என்ற அமைப்பை சேர்ந்தவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்(பனியாக்களின் சதியாகக் கூட இருக்கலாம்)..
தீர்மானமும் கிடப்பில் போடப்பட்டது..!
வெள்ளையன் செட்டியார் இறப்புக்குப் பிறகு பர்மிய சொத்துகளைப் பற்றி வாய் திறக்கவே செட்டியார்கள் அஞ்சினர்..
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ப.சிதம்பரம் நிதி அமைச்சரான நேரத்தில் செட்டியார்களின் பர்மிய சொத்துகளை மீட்பதற்கான முயற்சிகள் மீண்டும் வேகமெடுத்தன..
சிதம்பரம் தன் செல்வாக்கைப் பயன்படுத்தி பர்மாவில் கைவிட்டுப் போன தனது முன்னோர் (சுரண்டல்)சொத்துகளை மீட்க அரும்பாடுபட்டார்..
சிதம்பரத்தின் அழுத்தத்தின் பெயரில்
2011ல் பர்மா முதலீட்டாளர் குழு என்ற பெயரில் ஒரு அமைப்பு இந்திய அரசால் ஏற்படுத்தப்பட்டு மியான்மர் அரசுடன் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன..!
மியான்மர் அரசு எதற்கும் மசியவில்லை. சொத்தோ இழப்பீடோ தர மறுத்து விட்டது. பர்மாவில் கைவிட்டுப் போன நகரத்தார்களின் சொத்து மதிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது..(இதெல்லாம் மிகவும் சொற்பமான கணக்கு என்பது என் கணிப்பு)
தென்கிழக்காசியா முழுவதும் நகரத்தார் கட்டுப்பாட்டில் இருந்தாலும் அவர்களின் கருவூலம் பர்மாதான்..பர்மாவில் விழுந்த அடியே தெற்காசியாவில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாக கொலொச்சிய நகரத்தார்களின் வீழ்ச்சிக்குப் போடப்பட்ட பிள்ளையார் சுழி..!
சப்பான் படையெடுப்பும் பர்மியப் புரட்சியும் நிகழாமல் இன்னுமொரு கால் நூற்றாண்டு காலம் ஆங்கிலேயே ஆட்சி பர்மாவில் நீடித்திருந்தால் யூதர்கள் பாலத்தீனத்தை கைப்பற்றியதைப் போல நகரத்தார்கள் ஒட்டுமொத்த பர்மாவையும் விலைக்கு வாங்கி செட்டிநாடு என பெயர் சூட்டியிருப்பார்கள்…!
நன்றி ஆரல்கதிர் மருகன்