தமிழ்நாட்டில் இருந்து கடல் கடந்து சென்று உலகமெங்கும் அறம் சார்ந்து இயங்கிய தமிழ்நாட்டு வணிகர்களின் வணிகத்தை மீட்டெடுக்க வேண்டும் எனவும்..
அந்த வணிகர்களைப் போல ஆதிக்கவாதிகளுக்கு எதிராக நாம் பெரும் ஆற்றலாக உருவாக வேண்டும் எனவும் தமிழ்த்தேசிய சிந்தனையாளரும் வரலாறுகள் பல அறிந்த பேராசியருமான அண்ணன் ஒருவர் கட்டுரையில்
சொல்லியிருந்தார்..
பலரும் இப்படிதான் சொல்கிறார்கள்…குறிப்பாக நகரத்தார்கள் அறம் சார்ந்து இயங்கிய வணிகர்கள் என்று அடையாளப்படுத்துகிறார்கள்..
ஆனால் வரலாறு அப்படி சொல்லவில்லை..
பர்மாவை மட்டும் எடுத்துக் கொள்வோம்..
1850 ம் ஆண்டுகளில் பர்மாவின் விளை நிலங்கள் ஆயிரம் ஏக்கர் என்று சொல்லப்படுகிறது..1870 க்கு பிறகு செட்டிகளின் பார்வை பர்மா மீது விழுந்தது..
தங்களது வட்டித் தொழிலை பர்மாவில் தொடங்கினர்..வட்டி கட்ட முடியாத பர்மியர்களிடமிருந்து அடமானமாக பெற்ற நிலங்கள் செட்டியார்களால் கையகப்படுத்தப்பட்டன..
அரை நூற்றாண்டில் பர்மாவின் வேளாண் நிலங்கள் சில லட்சம் ஏக்கர்களாக உயர்ந்தன..பர்மா ஆசியாவின் ‘அரிசிக் கிண்ணம்’ என்று சொல்லப்படும் அளவுக்கு பர்மாவில் விளைந்த அரிசி மேற்கத்திய நாடுகள் வரை ஏற்றுமதி செய்யப்பட்டன..வேளாண்மைக்காக பர்மாவின் வளமிக்க தேக்கு மரக் காடுகள் அழிக்கப்பட்டன..
செட்டியார்களின் ஏற்றுமதி வணிகம் தடை பெறமால் நடக்க ஏற்படுத்தப்பட்டதுதான் சூயஸ் கால்வாய்..
1923 ஆண்டு கணக்கீட்டின்படி பர்மாவில் சற்றொப்ப 150 ஊர்களில் செயல்பட்டு வந்த செட்டிகளின் வட்டிக் கடைகளின் மூலம் ஏறக்குறைய 70 கோடி ரூபாய் வட்டித் தொழிலில் சுழன்று கொண்டிருந்தது..
அன்றைய காலகட்டத்தில் ஒரு கிராம் தங்கத்தின் மதிப்பு 2.6 ரூபாய்..இதை கொண்டு கணக்கிட்டால் 70 கோடியின் இன்றைய சந்தை மதிப்பு 120000 கோடிக்கும் அதிகம்..!
கொஞ்ச காலத்தில் வட்டித் தொழில் மூலம் நகரத்தார் வசம் 10 லட்சம் ஏக்கர் பர்மிய நிலங்கள் வந்தன..ராஜா சர் அண்ணாமலை செட்டியார் குடும்பம் மட்டுமே ஒரு லட்சம் ஏக்கர் நிலங்களை வைத்திருந்தது..
பர்மாவை வணிகத் தலைமையிடம் போல வைத்துக் கொண்டு செட்டிகள் தென்கிழக்கு ஆசியா முழுதும் கடல் வணிகத்திலும் வங்கித் தொழிலிலும் கொடி கட்டிப் பறந்தனர்..
1940 க்குப் பிறகு ஏற்பட்ட உலகப்போர் நெருக்கடியோடு..தங்கள் நிலங்களையும் வளங்களையும் சுரண்டிக் கொழுத்த செட்டிகள் மேல் பர்மியர்களுக்கு இருந்த வன்மமும் சேர்ந்து வெடித்த பர்மியப் புரட்சியால் செட்டிகளின் வசமிருந்த நிலங்கள் பிடுங்கப்பட்டன..
உயிருக்கு அஞ்சி தமிழ்நாட்டுக்கும் இன்னும்பிற வெளிநாடுகளுக்கும் நகரத்தார் பலர் தப்பி சென்றனர்..
ஆனால் கூலி வேலைகளுக்காக தமிழ்நாட்டிலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்கள் அங்கேயே சிக்கிக் கொண்டனர்..
ஜப்பான் படையினரிடம் அவ்வாறு சிக்கிய தமிழர்களைக் கொண்டு தாய்லாந்து பர்மா இடையே போடப்பட்ட இரயில் பாதை ஒன்றிற்காக சோறு..தண்ணி இன்றி வேலை வாங்கியதில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர்..
ஆசியத் தொழிலாளர்கள் 90000 பேர் செத்ததாக சொல்லப்பட்டாலும் இதில் தமிழர்களின் எண்ணிக்கை மிக அதிகம்..!
அந்த இரயில் பாதை மரண இரயில் பாதை என்றே அழைக்கப்படுகிறது..!
பர்மாவின் பள்ளிப் பாடப்புத்தகங்களிலும் திரைப்படங்களிலும் செட்டியார்களை கொடூரமான சுரண்டல்காரர்களாக சித்தரித்து இன்று வரை அந்த வரலாறை பர்மியர்கள் கடத்தி வருகின்றனர்..
பர்மியர்களை இன்று வரை “தமிழர்கள்” எங்கள் வளங்களை எல்லாம் சுரண்டி சென்றார்கள் என்றே சொல்கிறார்கள்..
மேற்சொன்ன வரலாற்றின் இடுக்குகளில் நீங்கள் சொன்ன “அறம்” எங்கே ஒளிந்திருக்கிறது என்பதை கண்டுபிடித்து சொல்லுங்களேன்..!
நன்றி