உலக இயங்கியலை தீர்மானிக்கும் வட்டி – பணம்

140

அமெரிக்காவில் Wall street எனப்படும் ஒரு கிலோ மீட்டர் நீளம் கொண்ட சிறு தெருவில் உட்கார்ந்து கொண்டு உலகத்தின் ஒட்டுமொத்த பங்குச்சந்தை ஊக வணிகத்தையும்.. சக்திவாய்ந்த வங்கிகளையும் இயக்குவது யூத பெரு முதலாளிகளே..!

பல்லாயிரம் ஆண்டுகளாக யூதர்கள் வட்டித் தொழிலில் கைத்தேர்ந்தவர்கள் என்றும் நவீன வங்கி அமைப்பை உருவாக்கியவர்கள் யூதர்கள் தான் என்றும் சொல்லப்படுகிறது..

இக்கூற்று பாதி உண்மை..!

வட்டித்தொழிலை யூதர்களுக்கு கற்றுக் கொடுத்தவர்களே நகரத்தார் எனப்படும் செட்டிகள் தான்..!

மத்திய கிழக்கில் அரேபிய நாடுகளிலெல்லாம் யூத வணிகக் குழுக்களை கங்காணிகளாக அமர்த்தி வட்டித் தொழில் செய்தோரும் கடல் வணிகம் புரிந்தோரும் நகரத்தாரே..!

செட்டிகளின் ஆசீவகக் கடவுளான சேயோன் எனும் முருகனை இன்றளவும் யூதர்கள் சீயோனிசம் எனும் பெயரில் வழிபடுவதும் முருகனுக்கு உரித்தான அறுகோண நாள்மீனை(கார்த்திகை நட்சத்திரம்) தங்கள் தேசியக் கொடியில் வைத்து பெருமைப்படுத்துவதும் யூத வணிக இனக் குழுக்கள் செட்டிகளுக்கு கீழ் வேலை செய்தவர்கள் என்பதற்கான சான்றுகள்..!ஆறுமுகம் என்ற தத்துவம்.

தன் மாமாவுடன் வணிகம் செய்துவந்த நபிகள் வட்டித்தொழிலால் அரேபிய மக்கள் படும் இன்னல்களை பொறுக்க முடியாமல் வட்டியையும் வட்டிக்கு விட்டு சுரண்டுவோரையும் ஒழித்துக் கட்டுவதற்காக தோற்றுவித்ததே இசுலாம் சமயம்..! இஸ்லாமில் சூதாட்டம்,செஸ் போன்ற விளையாட்டுக்கள் எல்லாம் இன்றளவும் தடை,இவை எல்லாமே பண்டைய இந்திய வணிகர்கள் கண்டுபிடித்த வணிக விளையாட்டுக்கள்

இசுலாம் தோன்றிய பிறகு யூதர்களாலும் நகரத்தாராலும் அரேபிய மண்ணில் கால் வைக்க முடியவில்லை..!

பல்லாயிரம் ஆண்டுகளாக அரேபியாவுடனான செட்டிகளின் வணிகத் தொடர்பு அறுபட்டது..!

சாத்தான் என்றால் கடவுளுக்கு எதிரான தீய சக்தி எனவும்.. மக்கள் படும் இன்னல்களுக்கெல்லாம் சாத்தானே காரணம் என்றும்.. சாத்தான் ஆசை வார்த்தைகள் கூறி நம்மை நரகத்தில் தள்ளி விடுவான் என்றும் சாத்தானை மிகப்பெரிய எதிரியாக இசுலாம் குர்ஆன் உட்பட பல இடங்களிலும் பதிவு செய்துள்ளது..வட்டி வணிகமே உலகின் மிகப்பெரிய தீமை என்று இயேசு கிறிஸ்து கூறியுள்ளதுடன்,ஜெருசலேமில் இருந்த வட்டி கடைகளை அடித்தும் நொருக்கியுள்ளார்.பின்னர் இயேசுவை அதே யூதர்களுக்கு வெள்ளிகாசுக்காக காட்டி கொடுத்தார்கள்.அன்றே காசை வைத்து விளையாடியிருக்கின்றார்கள்.

சவுதியின் மெக்காவுக்கு அருகிலுள்ள மினா எனுமிடத்தில் சாத்தானை கல்லால் அடிக்கும் சடங்கு இன்றளவும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.. லட்சக்கணக்கான இசுலாமியர்கள் ஒரு சிறு கட்டட அமைப்பை சாத்தானாகக் கருதி கல்லால் அடிக்கிறார்கள்..!

தமிழ் மொழியாய்வின் தலைமகனாக விளங்கும் தேவநேயப் பாவாணர் சொல்கிறார்…#சாத்தன் எனும் சொல் தமிழ்நாட்டு வணிகக் குழுக்களையே குறிக்கும் என்று…! இவர்களே உலகம் முழுதும் வியாபித்தனர்.பணத்தை ஒரு பக்கத்தால் விட்டு இன்னொரு பக்கத்தால் எடுப்பதன் மூலம் உலக இயங்கியலை கட்டுபடுத்துகின்றனர்.இங்கு நம்மை சுத்தி நடக்கும் எல்லாம் இந்த பண ஓட்டத்தின் பக்க விளைவுகள்தான்.

நன்றி ஆரல்கதிர் மருகன்