யாழில் திடீரென மயங்கி விழுந்த 3 வயது சிறுவன் உயிரிழப்பு!

53

யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் வடமராட்சி அரியாலை பிரதேசத்தில் திடீரென மயங்கி விழுந்த 3 வயதான சிறுவன் வீட்டிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருந்த சிறுவனுக்கு தேவையான வைத்திய சிகிச்சை வீட்டிலேயே வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திடீரென வீட்டில் மயங்கி விழுந்துள்ளார். மயக்கத்துடன் அவர் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது நிலைமை தீவிரம் என்பதனால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

உயிரிழந்த சிறுவன் தொடர்பில் பிரேத பரிசோதனை மேற்கொண்ட வைத்தியர், கீழே விழுந்த போது தலையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழந்த சிறுவனின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கீழே விழுந்ததால் தலையில் பாதிப்பு ஏற்பட்டது பற்றி மட்டுமே கூறப்பட்டிருக்கு,ஏன் கீழ மயங்கி விழுந்தார் என்றதுக்குரிய காரணங்கள் சொல்லபடவில்லை,தெரிந்தோ தெரியாமலோ தவிர்க்கப்பட்டிருக்கின்றது.இது தொடர்ச்சியான தவிர்க்கபட்டே வருகின்றது.மக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஊட்ட எந்த அதிகார மயப்படுத்தப்பட்ட அமைப்புக்களும் தயாராகவில்லை.சொல்லுவதை மட்டும் செய்ய வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு,பாடசாலையில் எதிர்த்து கேள்வி கேட்டா “பெயில்” , நாட்டில் அரசை எதிர்த்து கேட்டால் “ஜெயில்” மதத்தை எதிர்த்து கேட்டால் நரகம் , மருத்துவத்தை எதிர்த்து கேட்டால் மரணம் என்று மக்கள் மனதில் அதிகார அமைப்பு பயத்தை பதிய வைத்துள்ளது.பயம் இருக்கிற இடத்தில் அறிவுக்கு வேலை இருக்காது.அதிகாரத்தை சார்ந்து வாழ மட்டுமே பெரும்பான்மை மக்கள் நிர்பந்திக்கப்படுகிறார்கள்.குறிப்பிட ஒரு கும்பலே ஒவ்வொரு இடத்திலும் தாமே வழிகாட்டுவதாக அதிகாரங்களை கைப்பற்றி தம்மக்களை வாழ வைத்து கொண்டுள்ளது.புவியில் பிறப்பெடுப்பது அறிவுக்கும் தூய சுதந்திரத்தையும் சுவாசிக்க மட்டுமே,அதற்கு அர்த்தமில்லாமல் வாழ்வதில் பயனில்லை.

Editor – Oru paper