கொரானாவால் உலக நாடுகள் திண்டாட்டம்,சீனா கொண்டாட்டம்!

275

கடந்த 10 மாதங்களுக்கு மேலாக உலக நாடுகள் கொரானா என்னும் நோயை எதிர்கொண்டு திண்டாடி வரும் நிலையில்,மிகப்பெரும் நாடுகளான ஐரோப்பிய நாடுகள்,அமெரிக்கா இன்று வரை மிகபெரும் வீழ்ச்சியை சந்தித்து கொண்டிருக்கின்றன.தினமும் ஆயிரகணக்கான மக்கள் புதிதாக வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகி கொண்டிருக்கின்றனர்.இதுவரை 23 மில்லியன் மக்கள் நோய் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்கள் இறப்பை நெருங்கி கொண்டுள்ளது உலகம்.பல சிறிய நாடுகள் சாதாரண கொரானா எதிர்ப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளை கூட செய்ய முடியாமல் திணறி வருகின்றனர்.அமெரிக்காவில் தினமும் 25000 பேர் புதிதாக சேர்க்கப்படுகின்றனர்.இவற்றில் அதிகமான குழந்தைகளும் அடங்குவார்.பல நாடுகள் வக்சீன்,மருந்துகள் என்று கண்டுபிடித்து சோதனைகள் என்று தொடர்ந்தாலும் கொரானாவின் வேகத்தை மனித இனத்தால் கட்டுபடுத்த முடியாமல் இருக்கின்றது.அது அதன் வேகத்தில் கூடி குறைந்து பரவி வருகின்றது.கொரானா பரவலில் முதலிடத்தில் அமெரிக்கா அடுத்து முறையே பிரேசில் இந்தியா ரஷ்யா,சவுத் ஆபிரிக்க,பிரித்தானியா பிரான்ஸ்,ஸ்பெய்ன் போன்ற நாடுகள் உள்ளன.

நிற்க..கொரானா வைரஸ் முதலில் சீனாவில் பரவி அதன் பின்னர் உலகமே எதிர்பார்க்காத நேரமாக இத்தாலி ஸ்பெய்ன் ஐரோப்பா என்று பரவி,பின்னர் முழுதாக அமெரிக்காவை பிடித்துகொண்டு ஆட்டி வருகின்றது.ஆனால் முதலில் பெரிதாக பரவ ஆரம்பித்த சீனா,இன்று வழமைக்கு திரும்பியுள்ளது.அவர்கள் அரச கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வழமைக்கு திரும்பியுள்ளதுடன்,தமது புதிய உலகு விஸ்தரிப்பு நடவடிக்கைகளில் அகல கால் வைத்து இறங்கியுள்ளனர்.கொரானா நிதி என்று சிறிய நாடுகளான சிறிலங்கா மலேசியா ஆப்ரிக்கா போன்ற நாடுகளுக்கு அளித்து தமது பிடியை பலப்படுத்தி கொள்வதுடன்,ஐரோப்பாவில் ஸ்பெயின் இத்தாலி பிரான்ஸ் நாடுகளுக்கு கொரானா பாதுகாப்பு உபகரணங்களை அதிகமா விற்றும் கடனுக்காகவும் கொடுத்து விற்று வருகின்றனர்.முக கவச விற்றலில் பல கோடி இலாபத்தை சீனா கம்பனிகள் பெற்றுள்ளன.

தாய்வான் தொடங்கி,இந்தியா மியான்மார் சிறிலங்கா என்று தமது பட்டு பாதை மாலையை சரியாக போட்டு கொண்டுள்ளனர்.ஐரோப்பிய நாடுகளில் ஏற்கனவே விழுந்துள்ள பெரும் பொருளாதார வீழ்ச்சிகளை தமக்கு சாதகமாக பயன்படுத்தி தமது வியாபாரத்தை நிறுவ கொள்கின்றனர்.அமெரிக்காவுக்கு பெரும் கடன் தொகைகளை தொடர்ந்து அளித்துவருகின்றனர்.உலகமே கொரானா நோய்தொற்று அவதியில் இருந்து மீள முடியாமல் திண்டாடும் போது,இவர்கள் தமது அரசியல் பொருளாதார நலன்களை முற்று முழுதாக முன்னிறுத்தி உலக அரங்கில் காய்களை நகர்த்துகின்றனர்.சீனா அரசின் பலத்துக்கு முன்னால் மற்றைய பெரும் நாடுகளாலும் எதிர்த்து நிற்க முடியாதுள்ளது.எதிர்வரும் அமெரிக்க தேர்தலில்,உள்நாட்டில் காணப்படும் சீனா ஆக்கிரமிப்பு,அமெரிக்கர்களின் வேலையிழப்பு என்பன பேசுபொருளாக இருக்கும் என்று அரசியல் ஆய்வாளார்களால் எதிர்நோக்கப்படுகின்றது.சீனாவோ அமெரிக்காவோ யாராகினும் எவ்வளவு குத்துகரனம் போட்டாலும் இவைகளை கட்டுபடுத்தும் ஒரு தடுப்பு தானாக எங்கோ ஒரு இடத்தில் எழும் என்பதே இயற்கையின் தன்னியல்பான விதியாகும்.அதற்கு இந்த கட்டுரை கூட ஒரு அங்கமாக இருக்கலாம்.