கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன் பிரித்தானியாவில் கொரோனா தடுப்பூசி தயாராகும்.

183

அடுத்த மாதம் பிரித்தானியாவில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்து விடும் என எதிர்பார்க்கப்படுவதாக கசிந்த ரகசிய தகவல் ஒன்று தெரிவிக்கிறது.

அத்துடன்,ஐந்து பிரமாண்ட தடுப்பூசி மையங்கள் கிறிஸ்துமஸ் நேரத்தில் செயல்பட இருப்பதாகவும் அந்த தகவல் தெரிவிக்கிறது.

பிரித்தானியாவில் ஐந்து இடங்களில் நாளொன்றிற்கு பல்லாயிரக்கணக்கான பொதுமக்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக நூற்றுக்கணக்கான அரசு மருத்துவமனை ஊழியர்கள் ஆயத்தம் செய்யப்பட்டிருப்பதாக கசிந்த ரகசிய ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

யாருக்கு எளிதில் கொரோனா தொற்றும் அபாயம் உள்ளதோ,அவர்களுக்கு தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை அளிக்கப்படும்.

ஐந்து பிரமாண்ட தடுப்பூசி மையங்கள் ஒழுங்கு செய்யப்பட இருப்பதுடன்,இந்த மாபெரும் தடுப்பூசிப் பணிக்காக மருத்துவர்களும் மருந்தக ஊழியர்களும் உதவிக்கு அழைக்கப்பட இருக்கிறார்கள்.

அவர்கள் அபாயகரமான இடங்களுக்கும் முதியோர் இல்லங்களுக்கும் சென்று தடுப்பூசிபோடும் பணியை மேற்கொள்ள இருக்கிறார்கள்.

இந்த விடயம் குறித்து தகவல் தெரிவித்த ஒருவர், முதல் கட்ட சோதனை இன்னும் ஒரு மாதத்தில் நடைபெற இருப்பதாக தெரிவித்தார், அப்படியானால்,கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன் தடுப்பூசியை எதிர்பார்க்கலாம்.

இந்த மாத இறுதியிலேயே தடுப்பூசியை அறிமுகப்படுத்தும் திட்டம் குறித்து அந்த ரகசிய ஆவணம் தெரிவித்தாலும், அது முறைப்படி பிரித்தானிய மற்றும் ஐரோப்பிய ஒன்றிய மருந்துகள் ஏஜன்சி அதிகாரிகளிடமிருந்து முறையான அனுமதியைப் பெறவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்படிப் பார்த்தால் இப்போதைக்கு போடப்பட்டிருக்கும் திட்டம் நடைமுமுறைக்கு வருமா என்பது கொஞ்சம் சந்தேகம்தான்.

இதற்கிடையில், ஞாயிறன்று பிரித்தானிய சுகாதாரத்துறைச் செயலர் Matt Hancock, தடுப்பூசி வழங்கும் திட்டத்தில் ராணுவமும் இணைந்துகொள்ளும் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

https://www.express.co.uk/videos/6196297919001/Jeremy-Hunt-says-we-re-likely-to-find-a-vaccine-before-Christmas

News by eelamranjan