கலெக்டர்களும் முதல்வர்களும்

66

இந்த பீலா ராஜேஷ், ஆந்திராவில் கை குழந்தையுடன் அலுவலகம் வரும் பெண் கலெக்டர் இன்னும் பல திறமையும் பயிற்சியும் சேவை உணர்வும் மிக்க பல ஐ.ஏ.எஸ் பற்றி பலரும் சிலாகிக்கின்றார்கள்

இதற்கு காரணம் என்னவென்றால் வேறொன்றுமில்லை, அவர்களுக்கு வழங்கபடும் பயிற்சி அப்படி

அவர்கள் மக்கள் சேவைக்கும் , பாதுகாப்புக்கும் , சமூகத்தினை கையாளவும், உரிய பயிற்சியும் தியாக உண்ர்வூட்டலும் முழுக்க முழுக்க மக்கள் நலனும் கொண்ட பயிற்சியில் மூழ்கி வருகின்றார்கள் அப்படித்தான் இருப்பார்கள்

அவர்கள் அப்படி இல்லை என்றால்தான் ஆச்சரியம்

முழுக்க சினிமா , நாடகம், வசனம் , நடிப்பு என சுற்றிகொண்டிருந்தவனை முதல்வர் என வைத்தால் அவன் நடிக்கத்தான் செய்வான், அவன் நடிக்கவில்லை என்றால்தான் ஆச்சரியம்

ரூபாய்க்கு 4 கொலை செய்பவனை அரசியலில் வளர்த்துவிட்டால் அவன் அராஜகம் செய்யத்தான் செய்வான்

இப்பொழுது மிக நெருக்கடியான நேரத்தில் நாட்டை காக்கும் பொறுப்பு ஐ.ஏ.எஸ் , ஐ.பி.எஸ் மருத்துவர்களால் மட்டும் முடியும் என சமூகம் உணர்கின்றது, அவர்கள் மிக மிக திறம்பட கையாளுகின்றார்கள்

இவர்கள் இன்னும் நெருக்கடி ஏற்படின் ராணுவத்தோடு கைகோர்த்தால் “ஆட்சி” என்பது என்ன என்பது மக்களுக்கு புரியும்

ஆக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அவர்களுக்கு கொடுத்த பயிற்சியினை நாட்டுக்கு உழைத்து தங்களை நிரூபிக்கின்றார்கள்

முந்தைய முதல்வர்களுக்காவது நடிப்பு பயிற்சி இருந்தது, வசன பயிற்சி இருந்தது சமாளித்தார்கள்

இப்போது பரிதாபமான நிலையில் இருப்பது பழனிச்சாமி கோஷ்டியும், முக ஸ்டாலின் கோஷ்டியுமே

இரண்டுக்கும் நடிப்பு பயிற்சி, வசன பயிற்சி என எதுவுமில்லை , ஐ.ஏ.எஸ் பயிற்சியுமில்லை

பாவம் திணறுகின்றார்கள்

Stanely Rajan