கொலம்பஸ் ஒரு குழப்பவாதி

69

1. இந்தியாவை நோக்கிய பயணத்தை துவக்கி அமெரிக்காவில் கால் பதித்தது. (A bad sailor).

2. அமெரிக்காவின் பூர்வ குடி மக்களை இந்தியர்கள் என அழைத்தமை. ( A wrong brander).

3. பிழை அறிந்த பின்னர் பெயரை செவ் இந்தியர்கள் என மாற்றியமை. இன்று கூட “இந்தியர்கள்” எனும் பதத்துக்கு மேலதிக விளக்கம் உலக அளவில் தேவைப்படுவது இப்படித்தான் ஆரம்பம் ஆயிற்று (Red Indian or East Indian?).

4. சரித்திரத்திலேயே மிகவும் கபடத் தனமான வாக்கியத்தை உருவாக்கியமை, “யார் அமெரிக்காவை கண்டு பிடித்து?” என்பதுவே (Who discovered America?). ஆறு கோடி பூர்வீக மனிதர்கள் வாழ்ந்த அமெரிக்காவில் கால் வைத்து விட்டு கண்டுபிடித்ததாக கூறி தமதாக்கிய துரோகம். யாருக்காக கண்டு பிடித்தது? யுரோப்பாவின் வெள்ளையருக்காக? அங்கு வாழ்ந்த 6 கோடி பழங்குடியினர்கள் மனிதர்கள் அல்லர்? இதே மனப்பாண்மையே பின்னர் மற்றய நாடுகளை (இந்தியா, தென் ஆபிரிக்கா, இலங்கை, அவுஸ்திரேலியா) காலாணித்துவ அடிமை கொண்ட போதும் பயன்படுத்தி இருப்பார்கள்.

5. அமெரிக்க பழங் குடியினர்களை கொன்று ஒழிக்கும் கலாச்சாரத்தை உருவாக்கியமை.

6. பழங் குடியினருடன் செய்த ஒப்பந்தங்களை பேனாமை.

7. இன்றும் கூட “அமெரிக்காவை யார் கண்டுபிடித்தார்?” எனும் சரித்திரப் பிழையான போக்கிரித் தனமான கேள்விக்கு பதில் “கொலம்பஸ்” என எழுதாவிடில் பாட சாலைகளில் புள்ளிகள் வழங்கப்படுவதில்லை. இல்லை என வாதிட்டால், அடி கூடக் கிடைக்கும்.

மாற்றுங்கள் சரித்திரப் பிழைகளை

நன்றி Selvan Kugan