20ஐ எதிர்த்து 39 மனுக்கள்- நாளை விசாரணை!

62

20ஆவது அரசியலமைப்புத் திருத்த யோசனைக்கெதிராக இன்று மாலை 4 மணிவரை 39 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த திருத்த யோசனைக்கு இன்று நண்பகல் வரை 20 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில் இன்று மாலையாகும்போது மேலும் 19 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன.

இதன்படி தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான பேராசிரியர் ரட்ணஜீவன் ஹுல், ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அக்கிலவிராஜ் காரியவசம், அக்கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன, சிரிக்க மக்கள் முன்னணி சார்பாக சட்டத்தரணி பி. லியனாராச்சி உள்ளிட்ட பலரும் இன்று மனுக்களை உச்சநீதிமன்றில் தாக்கல் செய்திருக்கின்றனர்.

இதற்கமைய 39 மனுக்கள் மொத்தம் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அவை மீதான பரிசீலனைகள் நாளை நடத்தப்படவுள்ளன.