அமெரிக்காவில் வீழ்த்தப்பட்ட கொலம்பஸ் சிலை

99

அமெரிக்காவில் இனவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் கொலம்பஸ் சிலைகள் தொடர்ந்து அடித்து உடைக்கப்படுகிறது.

இதில் தமிழர்களுக்கு ஒரு மிகப் பெரிய பாடம் உள்ளது.

ஏன் நாடெங்கும் உள்ள கொலம்பஸ் சிலைகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.அவர் அங்கிருந்த பூர்வீகத் பழங்குடிகளை கொன்று ஒழித்தவன்.ஆகவே நேற்றுவரை யாரெல்லாம் கொலாம்பஸ்க்கு ஆதரவாக நின்றார்களோ அவர்களே கோபம் கொண்டு இன்று சிலைகளை அடித்து நொறுக்கியது தான் சிறப்புச் செய்தியாகும்.

ஒரு தேசிய இனத்தை வஞ்சித்து,அதன் மொழியை இழிவு செய்து,அவர்களின் அறிவுச் சொத்துக்களை இகழ்ந்து,அவர்களின் நிலத்தை அபகரித்து, அவர்களை உணர்வு ரீதியாகவும்,அறிவு ரீதியாகவும் ஊனப்படுத்திச் செழித்து வாழ்கிற தேசிய இனத்தவர்கள் யாராக இருந்தாலும் வரலாற்றில் ஒரு நாள் பழிவாங்கப்படுவார்கள்.ஏமாற்றப்பட்டத் தேசிய இனம் எக்காலத்துக்கும் ஏமார்ந்த படியே இருக்காது.ஒரு நாள் ஒரு செயலில் விழித்தெழும்.அப்பொழுது உங்களின் சிலைகள் நொறுக்கப்படும் என்பதற்கு அமெரிக்க கொலம்பஸ் சிலை உடைப்பு சிறந்த உதாரணம்.

ஆகவே, வரலாறு தமிழகத்திலும் காத்துக்கொண்டிருக்கிறது.வஞ்சிக்கப்பட்டுள்ள தமிழினம் ஒரு நாள் விழித்தெழும்.அப்பொழுது இங்கும் பலர் சிலைகள் அடித்து நொறுக்கப்படும்.

தமிழன்