சென்னையில் கொரோனா நோயாளிகள் 277 பேர் தப்பி ஓட்டம் : செய்தி

53

நோயாளி என உறுதிபடுத்த முடிந்ததாம், ஆனால் அவர்கள் முகவரியோ இதர தகவல்களோ தெரியாதாம்

இதெல்லாம் என்ன வகை நியாயமோ தெரியவில்லை

நோயாளி என உறுதிபடுபடுத்தபடும் பொழுது மொத்த தகவலும் ஆவணபடுத்தபட்டிருக்கும், சம்பந்தபட்ட முகவரியில் 4 அடி அடித்தால் கொரோனா நோயாளி தானாக ஓடிவந்து மருத்துவமனையில் விழபோகின்றான்.

இது அரசுக்கு தெரியுமெனினும், இதெல்லாம் தமிழகத்தின் வீண் பரபரப்பு செய்திகள். இம்மாதிரி பொறுப்பற்ற செய்திகளை வெளியிடும் பத்திரிகைகள் மேல் முதலில் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

எனினும் ஓடிபோகும் மனநிலை ஆபத்தானது, இது தனித்து சாவதை விட பலபேரை கொன்றுவிட்டு சாகலாம் எனும் விபரீத தற்கொலை எண்ணம் போன்றது.

தென்கொரியா இதனால்தான் முன்பு கொரோன நோயாளிக்கு கையில் எலக்ட்ரானிக்ஸ் பட்டை கட்டி அடையாளபடுத்தி, “மவனே இதை கழற்றினால் கொரோனாவால் பிழைத்தாலும் வாழமாட்டாய்” என துப்பாக்கி காட்டி மிரட்டி வைத்திருந்தது குறிப்பிடதக்கது.

Stanly Rajan