சென்னை கழிவு நீரில் கொரோனா வைரசின் இறந்த செல்கள்..!

குடிநீர் மற்றும் கழிவு நீர் அகற்று வாரியம் மூலம் சென்னையில் சேகரிக்கப்படும் கழிவு நீரில் கொரோனா வைரஸ் நோய் தொற்று உள்ளதா, என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதற்காக ராயபுரம், நெசப்பாக்கம், அடையாறு, கோயம்பேடு, பெருங்குடி என ஐந்து இடங்களில் உள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. முதல் கட்ட ஆய்வில் சேகரிக்கப்பட்ட கழிவு நீரில் கொரோனா வைரஸ் இறந்த செல்கள் இருப்பதை வாரியம் கண்டறிந்துள்ளது. கழிவு நீர் சுத்தகரிப்பு செயல்முறையில், பயன்படுத்தப்படும் கிருமி நாசினியால் கொரோனா வைரஸ் இறந்து விடுவதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரசின் இறந்த செல்கள் கழிவு நீரில் கண்டறியப்பட்டு உள்ளது தெற்காசியாவிலேயே சென்னையில் தான் முதன் முறை என வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நோய் தணிந்த பின்னரும் கழிவு நீரை தொடர்ந்து கண்காணிப்பது கொரோனா தொற்று கட்டுபாட்டிற்குள் வந்துள்ளதா என அறிய உதவும் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

நீரை சுத்திகரிக்க பயன்படும் இரசாயனங்கள்,கொரான கிருமிகளை அழிக்க கூடியதாக இருந்தால்,அவை சாதாரண மனித உடல்களுக்கு என்னவெல்லாம் செய்யும்? உடலின் உட்பக்கமோ வெளிபக்கமோ,நீர் இராசயனங்கள்,மனித உடலில் பலவித நோய்களை ஏற்படுத்தியே தீரும் என்பது குறிப்பிடதக்கது.கெட்டத்திலும் நல்லது நடக்கும் என்று இவற்றைதான் சொல்வார்கள்