கொரானா பரப்பியதாக ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ்க்கு சீனாவில் நுழைய தடை

383

கொழும்பு-ஷங்காய் விமான சேவையில் ஈடுபடும் ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் விமானத்திற்கு 4 வாரங்களுக்கு சீனாவின் சிவில் ஏவியேசன் தடைவிதித்துள்ளது.

கடந்த 7 ஆம் திகதி -ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் UL866 விமானத்தில் ஷங்காய்க்கு பயணித்த பயணிகளில் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜுன்.4, ஆம் திகதி சீனாவின் சிவில் ஏவியேஷன் தலைமை (CAAC) Civil Aviation Administration of China புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையின்படி.

CAAC கொள்கையின்படி, கொரோனா வைரஸ் தொற்றுக்கான பரிசோதனை விமானத்தில் உள்வரும் அனைத்து பயணிகளுக்கும் தொடர்ச்சியாக மூன்று வாரங்கள் பரிசோதனையில் negative இருந்தால், விமான சேவை நிறுவனம் அதன் விமானங்களின் எண்ணிக்கையை வாரத்திற்கு இரண்டாக அதிகரிக்க அனுமதிக்கப்படும்.

positive ஆக பயணிகளின் எண்ணிக்கை ஐந்தை எட்டினால் விமான சேவை விமானங்கள் இடைநீக்கம் ஒரு வாரம் நிறுத்தப்படும். நேர்மறை positive சோதனை செய்யும் பயணிகளின் எண்ணிக்கை 10 ஐ எட்டினால் இடைநீக்கம் நான்கு வாரங்களுக்கு நீடிக்கும்.இந்த நடைமுறையை அடுத்தே சோதனையில் 23 பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதால் 4 வாரங்களுக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் கொரானா பரவல் கட்டுக்குள் வந்துள்ளதாக தொடர்ச்சியாக தெரிவித்துவந்த சிறிலங்கா அரசின் பொய் முகத்திரை கிழிந்துள்ளதுடன்,கொரானா தொடர்பான சரியான பாதுகாப்பு நடவடிக்கைகள்,பரிசோதனைகள் என்பவை ஶ்ரீலங்காவில் நடைபெறவில்லை என்பதும் இதில் இருந்து தெரிய வருகின்றது.