ஒரே நாளில் உலகம் முழுதும் கோவிட்-19 நோய் 25000 பேர்களை கடந்து புதிதா தொற்றியுள்ளதுடன்,ஆயிரம் பேர் வரை இறந்துள்ளனர்.இத்தாலியில் 45000 மக்கள் நோய் தொற்றுக்கு இலக்காகியுள்ளதுடன்,ஸ்பெயினில் புதிதாக 10000 பேரும்,ஈரானில் 15000 பேரும்,பிரான்ஸ்,அமெரிக்கா,ஜேர்மனியில் 9000 பேரும் புதிதாக நோய் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். சடுதியாக நோய் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பதுடன்.இறப்பு சதவீதமும் உயர்ந்துள்ளது.இதுவரை உலகம் முழுதும் 3 லட்சம் பேர் பாதிக்கப்படிருப்பதுடன் 10000 பேர் வரை இறந்துள்ளனர்.
கோவிட் – 19 நோய்,பெரும்பாலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த முதியவர்களையே இறப்பிற்குள் தள்ளுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.உலகம் முழுதும் மக்களை வீட்டில் இருக்குமாறு அரசுகளால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.வீட்டிலிருந்தவாறே வேலை,மற்றும் பாதுகாப்பு பொறிமுறைகள் பற்றி போதிய விளக்கங்களும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு கொண்டிருக்கின்றன.