கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட மற்றுமொரு நோயாளி சற்றுமுன்னர் உயிரிழந்துள்ளார் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
கொழும்பு ஐனுர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 48 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை நாட்டில் இதுவரை 189 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் 250 க்கும் அதிகமானோர் நாட்டின் பல்வேறு வைத்தியசாலைகளில் மருத்துவ கண்காணிப்பின் கீழ் உள்ளனர்
மேலும் 44 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக இலங்கை தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.