ஐரோப்பாவை மீண்டும் புரட்டியெடுக்க போகும் கொரானா!

411

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஸ்பெய்னில் 8 இலட்சத்து 65 ஆயிரத்து 631 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 12 ஆயிரத்து 793 பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, 261 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேபோன்று பிரான்சில் 6 இலட்சத்து 34 ஆயிரத்து 763 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 10 ஆயிரத்து 489 பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, 66 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, ஜேர்மனியில் 3 இலட்சத்து 7 ஆயிரத்து 119 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 09 ஆயிரத்து 635 பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, 19 பேர் உயிரிழந்துள்ளனர்.