கொரானாவும் பணமும்

88

பணக்காரர்களுக்கு பாதுகாப்பானது உலகம் என்பதும் அவர்கள் தொழிலுக்கு உலக அரசுகள் துணை நிற்கும் என்பதும் இங்கு எக்காலமும் உள்ள விஷயம்

கொரோனா காலத்து முடிவில் அது நன்கு தெரிகின்றது

ஆம் மளிகை கடை , உணவகம் என எல்லா இடங்களிலும் சமூக இடைவெளி எல்லா நாட்டிலும் வேண்டுமாம், தியேட்டர் கூடாதாம், அட சர்ச்சகளில் கூட 3 அடி தள்ளி அமரவேண்டுமாம்

ஆனால் விமானத்தில் நெருக்கமாக அமரலமாம். விமானத்தில் மட்டும் கொரோனா பரவாதாம்

இந்தியாவில் மட்டுமல்ல உலகின் பல நாடுகளில் இந்த விசிதிரம் நிகழ்கின்றது. காரணம் நடு இருக்கை காலியாக இருந்தால் அவர்களால் விமானத்தை இயக்க முடியாதாம், இதனால் நிரப்பி தீரவேண்டும் என்ற கோரிக்கைக்கு அரசுகளும் நீதிமன்றமும் செவிசாய்க்கின்றன.

நாடுகளுக்கு இடையேயான விமான பயணம் மெல்ல தொடங்க இருக்கின்றது, நாடுகள் பச்சை கொடி காட்டுகின்றன‌

ஆனால் முதல் கட்டமாக ராஜதந்திரிகள் மற்றும் நிரந்தர வசிப்பிட‌ வாசிகள் (குடியுரிமை அல்ல, வசிப்பிட அந்தஸ்து கொண்டவர்கள்) மட்டும் அனுமதிக்கபடுவார்கள், முன்பு டிப்ளமேட்ஸ் எனப்படும் ராஜதந்திரிகள் உதாரணமாக தூதர்கள் போன்றவர்களையும் அவர்கள் கொண்டுவரும் பொருளையும் சோதிக்க கூடாது எனும் விதி இருந்தது, இனி அவ்விதி காற்றில் பறக்கவிட படுகின்றது

எந்த கொம்பன் என்றாலும் அவர்களும் அவர்களின் பொருட்களும் சோதிக்கபடும் என சொல்கின்றன நாடுகள்

இப்படிபட்ட ராஜதந்திரிகளும் குடியேறும் அந்தஸ்து கொண்டவர்களும் வெளிநாட்டுக்கு வந்தால் வரும்பொழுது 3 நாட்களுக்கு முன்பாக தன் சொந்த நாட்டில் தனக்கு கொரோனா இல்லை எனும் சான்றிதழை வைத்திருக்க வேண்டுமாம், அதை சரிபாக்கும் அந்நிய நாடு அவரை அனுமதிக்கும் ஆனால் அவர் 14 நாட்கள் தன்னை தனிமைபடுத்தி கொள்ள வேண்டுமாம்

ராஜதந்திரிகள் மற்றும் நிரந்தர வசிப்பிட அந்தஸ்து இல்லாதவர்கள் யாரும் பயணிக்க இன்னும் தடை நீடிக்கின்றது, அது முடிய இன்னும் சில மாதம் ஆகலாம்

மற்றபடி சொந்த நாட்டுக்கு திரும்பும் மக்களுக்கான கதவுகளை திறக்க அரசுகள் ரெடி, ஆனால் சிக்கல் விமான கம்பெனிகளிடம் உள்ளது.

ஆம் ஒருவழியில் மட்டும் பயணிகளை ஏற்றி சென்று இறக்கிவிட்டு வெறும் வண்டியாக திரும்ப அவர்கள் தயார் இல்லை..

நன்றி – Stanly Rajan