ஆசியாவில் கொரோனா பாதிப்பு, வேகமாக முன்னேறி முதலிடத்தை பிடித்த இந்தியா

77

சர்வதேச அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில், ஆசிய கண்டத்தைச் சேர்ந்த நாடுகளான துருக்கி, இந்தியா ஆகியவை நேற்று வரை 9 மற்றும் 10ஆவது இடங்களில் இருந்தன. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை மேலும் 7 ஆயிரத்துக்கும் மேல் பதிவானதால், மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 65 ஆயிரத்தை தாண்டியது.

இதனால் அப்பட்டியலில் இந்தியா 9ஆவது இடத்துக்கு முன்னேறியது. அதேநேரத்தில் அந்த பட்டியலில் , 1 லட்சத்து 60 ஆயிரத்துடன் 10ஆவது இடத்துக்கு துருக்கி நாடு பின்தள்ளப்பட்டது. இதனால் ஆசிய நாடுகளில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. அந்த பட்டியலில் ஆசிய நாடுகளான ஈரான் 11ஆவது இடத்திலும், சீனா 15ஆவது இடத்திலும் உள்ளன.

மத்திய மாநில அரசுகளின் மக்கள் மீதான அக்கறையின்மையும், சேவை செய்ய வேண்டிய மக்களை விடுத்து காப்பரேட்டுக்களுக்கு சேவை செய்வதில் முழுநேரமும் கண்ணும் கருத்துமாக மத்திய அரசு இருப்பதால்,ஆறு குளம் இயற்கை காடுகள் என்று இருக்கும் அத்தனையையும் தனியாருக்கு எழுதி கொடுத்து கொண்டிருக்கும் இந்திய மத்தியரசு,வெளிநாடுகளில் தங்கியில்லாமல் தற்சார்பை நோக்கி போகவுள்ளதாகவும்,ஆக மக்களை மக்களே இருப்பவற்றை வைத்து பார்த்து கொள்ளுங்கள் என்று அறிவுறுத்துகின்றனர்.இனி மக்களிடம் பிடுங்கி தனியாருக்கு கொடுப்பதற்கு உங்களிடம் எதுவுமில்லை என்ற அர்த்தத்தில் சொல்ல வருகிறார்கள் போல…இவர்களை தேர்ந்தெடுத்த மக்களை கொரானா கொல்வதில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை.இந்த அநியாய அரசுகள் அழிய வேண்டுமெனில்,இவர்களை தேர்ந்தெடுக்கும் அயோக்கிய மக்கள் கூட்டம் முதலில் அழிந்து போக வேண்டும்.இந்த அரச முறைகளும்,இவர்களுக்கு முண்டு கொடுக்கும் மக்கள் கூட்டமும் தொலைந்து போகும் போதுதான் புதிய இந்தியா பிறக்கும்.