கொரோனாவை விட நான் கொடூரமானவன் – கருணா கொதிப்பு

80

கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா தொற்றினை விட தான் அபாயகரமானவன்தான் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார்.

அம்பாறை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.காரைத்தீவு உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் ஒருவர் “கருணா கொரோனாவை விட அபாயகரமானவர் என தெரிவித்திருந்தார்”

இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே கருணா அம்மான் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் போது ஆனையிறவு முகாமில் இருந்த அதிகமான இராணுவத்தை ஒரே இரவில் அழித்துள்ளேன். அதேபோன்று கிளிநொச்சியிலும் பல இராணுவ வீரர்களை கொன்றுள்ளேன் என குறிப்பிட்டார்.

இராணுவ வீரர்களை அழித்தேன் என்று சிறிலங்கா நாட்டின் ஆட்சியில் இருக்கும் தேசிய கட்சியில் இருந்தவாறே ஒருவரால் சொல்ல முடிகின்றது.சிங்களவர்கள் தமிழர்களை விட ஏமாளிகளாக இருக்கிறார்களே? இதை நினைத்து அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.தமிழர்கள் எங்களுக்கு ஶ்ரீலங்கா மீது அக்கறை அவ்வளவு இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும்.ஆனால் அக்கறையுள்ள சிங்களவர்கள் என்ன செய்ய போகிறார்கள் என்பதை பார்க்கலாம்? எங்களை ஏமாற்றிவிட்டு உங்கள் பக்கம் வந்தான்,போனது போகட்டும் என்றால்,இன்று உங்களையும் ஏமாற்றுகிறான்.நீங்கள் இவனை என்ன செய்ய போகிறீர்கள்? இல்லை நாளை சிறிலங்காவுக்கு எதிரான போர்குற்றம் என வல்லரசு நாடு காசு கொடுத்தால்,கூவ கூடிய ஒருவன்.எனவே கவனமாக இருங்கள்.எங்களை போன்று ஏமாந்துவிடாதீர்கள்.சிறிய அலட்சியங்கள்தான் பெரிய விளைவுகளை ஏற்படுத்துகின்றன.