கொரானாவால் விளையும் நன்மை தீமைகள்…

229

வீட்டு உணவை கட்டாயமாக்கயிது அதாவது துரித / கலப்பு / இராசாயண / சந்தை உணவை தவிர்கக வைத்தது…

மீண்டும் வீட்டு பலகாராங்கள் செய்யுமுறை உருவானது…

நகரத்தில் எவ்வளவு விடயங்கள் / மக்களுடன் சார்புடன் வாழ்வதனால் ஏற்படும் விளைவுகளை உணர முடிந்தது..

கிராமத்தில் காய்கறி மற்றும் பலவகை மரங்களுடன் வாழ்பவர்கள் தற்போது அந்த விடுதலையை உணர்கிறார்கள்.. அவர்கள்தான் தற்போதைய ராஜாகாகள்…

உறவுகளுடனும் நண்பர்களுடனும் பேசுவதற்கு நேரமிருக்கிறது… பொழுதுபோக்கு விடயங்களும் தேவையில்லா வணிக தளங்களுக்கும் போவது குறைந்ததனால்…

மக்களை அரசு காக்காகது பேரிடர் / போர் என வந்தால் என்பதை மக்கள் கால்நடையாக போவதையும் இறப்பதையும் பார்ககும்போது தெளிவாகிறது…

நகரங்கள் எவ்வளவு கூலித்தொழிலாளிகளை வேலையில்லாமல் போனால் என்னவாகுமென்பதை உணர்ததியது… இது பெருநிறுவனங்களில் நல்ல வேலையில் இருப்பவர்களுக்கும் பெருந்தும்…

மீண்டும் நகரங்கள் இயல்பிற்கு திரும்பும்போது அடிமட்ட கூலித்தொழிலாளிகள் இல்லாமல் அனுபவிக்க போவது ஒரு பக்கம்…

ஒரு தொற்றுநோய் (ஒரறிவு உயிரினம்) வைத்து உங்களிடம் பயத்தை விதைத்து ஒரு ஒழுங்குக்குள் கொண்டு வந்துவிடமுடியுமென நிருபித்திருக்கிறது..

இந்த இக்கட்டான நேரத்தில் முழு விடுதலையை நோக்கி ஒரு சிலர் நகருவதை முடிவெடுத்திருக்கலாம் ஒரு சிலர் இந்த தற்சார்பு விடுதலைக்கு தள்ளப்பட்டிருக்கலாம்.. ஒரு சிலர் கிராம கூலித்தொழிலாளியாகவும் மாறலாம்…

வளர்சசின்னு கூவிக்கொண்டிருந்த அரசு திடிரென அதற்கு வேறுபெயரை (தற்சார்பு) வைத்து நாடகமாடுகிறது… அது சரி அந்த தற்சார்பு இந்நிலத்தில் உள்ள பெருமுதலாளிகளுக்குதனாம்!

ஒரு சிலருக்கு நோய் எதிர்பபு சக்தியை எப்படி அதிகரிப்பது என்ற சிந்தனையையும் மிக அதிகமானோர் தடுப்பூசிக்கும் மருந்துக்கும் காத்திருக்கும் சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறது…

ஆளும் வர்க்கம் ஒரு விடயத்தை வைத்து உங்களை ஒரு ஒழுங்குக்குள் கொண்டு வரமுடியுமென நிருபித்திருக்கிறது…

மதங்களும், சாதிகளும், அரசியலும், சினிமாவும், விளையாட்டும், டாஸ்மாக்கும், ஆங்கில மருத்துவமும் உங்கள் வாழ்வியலில் தேவையில்லை என்பதை உணர்ததியது … ஆனாலும் உணராமலேயே பெருங்கூட்டமிருக்கிறது என்பது வேதனை… இவையெல்லாம் மீண்டும் முன்னரில்லாதளவிற்கு மீண்டும் வரும் என்பதை உணரமுடிகிறது…

மொழி வழி மாநிலங்கள் உருவாக்கப்பட்டதின் நோக்கம் சிதைந்து ஒற்றை இந்தியா என்கிற கட்டமைப்பு உருவாகுவதை நேரிடையாக பார்ககமுடிகிறது… ஆனாலும் கூட்டாட்சி என்கிற கோட்பாட்டை அறியாத பெருங்கூட்டத்தை காணமுடிகிறது…

முதலில் சமூக விலக்கல் மூலமாக இதை சரி செய்யலாம் என ஆரம்பித்தவர்கள் இப்ப அது வேலைக்காவாது என அதை பெயரளவில் வைத்து அனைத்தையும் ஆரம்பிக்க இருக்கிறது…

வழிபாட்டு தளங்கள் மூடப்பட்ட நிலையில் உங்கள் கடவுள்களைக்கூட வணங்க போகமுடியாமல் இருக்கவும் உங்களால் முடியும் என்பதை நிருபித்திருக்கிறது…

உலக கட்டமைப்பின் அதிகாரம் மாற்றப்படும் என எதிர்பார்ககப்படுகிறது இது ஒரு உளவியல் மாற்றத்தை மக்களிடம் ஏற்படுத்த மட்டுமே மேலும் நிறைய ஒற்றை உலக ஒழுங்கிற்கு நிறையவை வேகமாக நடைபெறும்… நிறைய நாடுகள் உருவாகலாம் மற்றும் சிலநாடுகள் சேர்ந்து ஒரு நாடாகாலாம், ஆனால் அதிகாரத்தின் மூலம் ஒருவரே…

இயற்கையோ செயற்கையோ இந்த நுண்ணூயிரி ஆனால் இதை வைத்து பெரிய நாடகத்தையே அரங்கேற்றிவிட்டார்கள்… இந்த நேரத்தில் கடந்த சில வருடங்களாக ஏற்பட்ட இயற்கையின் மாற்றங்களை / சீற்றங்களைப்பற்றி தேடுவதையில்லை…

ஒரு விடயம் மட்டும் புரியவில்லை நகரம் நோக்கி மக்களை நகர்ததிய ஆளும் வர்க்கம் இப்ப கிராம்ம் நோக்கி நகர்வதை நிறுத்த முடியவில்லை என்பது தெளிவாக தெரிகிறது… இதைமட்டும் வைத்து பார்ககும்போது இது இயற்கையானதுதான் என்று தோன்றுகிறது…

இந்த தொற்றுநோய் மேல்மட்ட மக்களிடத்தில் அதாவது விமான போக்குவரத்தில் பயணித்த வணிகர்களும் அவர்கள் சார்ந்த அலுவலகர்களால்தான் அதிகம் பரப்பபட்டது அதானால்தான் கிட்டதட்ட அனைத்து வணிக நகரங்களும் பாதிக்கப்பட்டுள்ளன… இதனாலேயே ஊரடங்கு போடப்பட்டது அதாவது மேல்மட்ட மக்களை காப்பாற்றுவதற்காக… தற்போது இவற்றை அடிமட்ட தொழிலாளிகளால் அல்லது ஏழை குடியிருப்புகளில் அதிகமாக பரவுதுதாக செய்திகள் வருகின்றன…

ஒற்றை உயிர் அல்லது செயற்கை கட்டுமானங்கள் ஓரிடத்தில் அதிகம் பெறுவதை இயற்கை அனுமதிப்பதில்லை… அதன் சான்றாக எடுத்துக்கொள்ளலாம்.. நகரங்கள் நரகங்களாக மாறுவதற்கு முன்னர் கிராம்ம் நோக்கி நகர்வதே சிறப்பு…

மனநோயாளிகளையும் கடனாளிகளையும் உருவாக்கிய இக்கட்டான சூழ்நிலை பற்றி ஊரடங்கு முடிய்தபிறகு பார்ககமுடியும்…

மொத்தத்தில் இயற்கை பயண்பெறப்போகிறதா, கிராம்ம் நோக்கி நகர்பவர்கள் பயண் பெறுகிறார்களா அல்லது ஆளும் வர்க்கம் பயண்பெறுகிறதா என்பதை பொறுத்திருந்துதான் பார்ககவேண்டும்…

இவற்றை தாண்டி நிறைய விடயங்கள் நினைவுக்கு வராமல் இருக்கலாம் இல்லை எனக்கு எட்டமாலேயே இருந்திருக்கலாம்… ஆனால் என்னை நகரத்திலிருந்தும் / சந்தை பொருளாதாரத்திலிருந்துல் வெளியேறவேண்டும் என்பதை நுரிதப்படுத்தியுள்ளது…

#தற்சார்பு_வாழ்வியல்