அந்த திராவிட ஆட்சியில் கூவத்தை தூய்மை செய்து படகுவிட ஒரு திட்டம் கொண்டு வரப்பட்டது…
இந்த திட்டத்திற்கு அப்போதே பல இலட்சங்கள் செலவிடப்பட்டன.
திட்டம் நிறைவேறவில்லை. பல இலட்சம் மக்கள் வரிப்பணம் போனதுதான் மிச்சம்…
கூவம் ஊழல் என்று எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியபோது… அந்த திராவிட முதல்வர் கூவத்தில் முதலை… அதனால் திட்டம் நிறைவேறவில்லை என்றார்.
அப்போது தாய் என்றொரு படம் சிவாஜி ஜெயலலிதா நடித்தது.
சென்னையில் இருந்து வரும் சிவாஜி கிராமத்தில் ஜெ. சென்னை எப்படி உள்ளது என கேட்க சிவாஜி பாடுவதாக ஒரு பாடல்.
பாடல் கண்ணதாசன்.
“பார்த்தாலும் பார்த்தேண்டி மதராசு பட்டணத்தை…” என்று பாடல் ஆரம்பிக்கும்.
அந்த இந்த வரிகள் கூவம் ஊழலை சொல்லும்…
“கூவத்திலே காசை அள்ளி போட்டிருக்காங்கா….
கூடவே ஒரு முதலையையும் விட்டுருக்காங்க….”
ஆளுங்கட்சி… சென்சார்… இந்த வரிகளுக்கு தடை எழுப்பவே…
கவிஞர் கண்ணதாசன் பாடல் வரிகளை இப்படி மாற்றியுள்ளார்…
“குப்பத்திலே காசை அள்ளி
போட்டிருக்காங்க….
கூடவே ஒரு முரடனையும்
விட்டிருக்காங்க….”
சென்சார் கப்சிப்.
இரண்டையும் படித்துப் பாருங்கள்
கவிஞரின் குறும்பு தெரியும்….
இதை சிவாஜி பாடும்போது ஜெயலலிதாவின் எதிர்வினை அழகான அமர்களம்…!
நன்றி – Palani Deepan