தொடர் ஊரடங்கு காரணமாக வெளியே செல்ல முடியாமலும், தொழிலை இழந்து வருமானம் அற்று வாழும் பெண் தலைமைத்துவ குடும்பத்திற்கும், வயோதிபர்களுக்கும், நாட் கூலி தொழிலாளர்களுக்குமாக 43 குடும்பங்களுக்கு 1000 ரூபா பெறுமதியான அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக கடந்த 7 நாட்களாக 121 குடும்பம்பத்திற்க்கு சாவகச்சேரி முகநூல் நண்பர்குழு மூலம் உணவளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சம்பந்தட்ட இளைஞர்களை இது குறித்து கேட்டறிந்த போது மற்றவர்களை நலமுடன் பார்த்துகொண்டால் நமக்கு மேல் உள்ளவன் எம்மை பார்த்துக்கொள்ளுவான் என்றார்கள்.மேலும் அவர்கள் சிறுதோ பெரிதோ தங்களால் முடிந்தவரை தமக்குள் ஒன்றிணைந்து உதவிகளை தொடர்ந்துகொண்டுள்ளனர்.
மனம் உண்டால் மார்க்கம் உண்டு.
