சளி தடிமனில் இருந்து வேறுபட்ட கொரோனா வைரஸ் வாசனை இழப்பு

354

கொரோனா வைரஸுடன் வரக்கூடிய வாசனையின் இழப்பு தனித்துவமானது மற்றும் மோசமான சளி அல்லது காய்ச்சல் உள்ள ஒருவர் அனுபவிக்கும் அனுபவத்திலிருந்து வேறுபட்டது என்று நோயாளிகளின் அனுபவங்களைப் படித்த ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

கோவிட் -19 நோயாளிகளுக்கு வாசனை இழப்பு இருக்கும்போது அது திடீரெனவும் கடுமையானதாகவும் இருக்கும்.அவர்கள் வழக்கமாக மூக்கடைப்பு மூக்கில் இருந்து சளி வெளியேறுதல் இல்லை – கொரோனா வைரஸ் உள்ள பெரும்பாலான மக்கள் இன்னும் சாதாரணமாக சுவாசிக்க முடியும்.

கொரோனா வைரஸின் முக்கிய அறிகுறிகள்:

காய்ச்சல்/ உயர் வெப்பநிலை

புதிய, தொடர்ச்சியான இருமல்

வாசனை அல்லது சுவை இழப்பு

இவற்றுடன் அதிக தலைவலி

இந்த அறிகுறிகள் உள்ள எவரும் சுயமாக தனிமைப்படுத்தி, அவர்களுக்கு வைரஸ் இருக்கிறதா என்று சோதிக்க வேண்டும்.

சாத்தியமான பரவலைத் தடுக்க அவர்களின் வீட்டு உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

சிகிச்சை

பொதுவாக இழந்த சுவை,வாசனை மணம் தொழிற்பாடுகள் சில கிழமைகளில் அல்லது சில மாதங்களில் படிப்படியாக திரும்பப்பெறும்.

மணம் சுவை வாசனை இழப்பு அனேகமான நோயாளிகளில் முற்றுமுழுதாக அல்லது பகுதி இழப்பாக இருக்கலாம்.

சிலசமயங்களில் சுவை நரம்புகள் மீண்டும் தொழிற்பட தொடங்கும்போது வேறுபட்ட சுவை வேறுபட்ட மணம் என்பவற்றை நோயாளிகள் உணர்வது வழக்கம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொதுவாக மேலதிக பரிசோதனைகள் ஆக தலையை ஸ்கேன் செய்யும் பரிசோதனை வைத்தியர்களால் மேற்கொள்ளப்படுவது வழமை.இதற்கு காது மூக்கு தொண்டை நிபுணர் அல்லது நிரம்பியல் நிபுணர்களின் ஆலோசனை பெறுவது அவசியம்.

பகுதியா மணங்களை/ சுவை,வாசனைகளை இழந்தவர்களின் செயல்பாட்டை சீர் செய்வதற்க்கு வாசனை பயிற்சி-smell training முறைகள் உள்ளது அறிந்ததே.

இந்தப் பயிற்சி முறை மிகவும் சுலபமானது. பொதுவாக நீங்கள் அறிந்த வாசனைபொருட்களை கண்ணால் பார்த்து அவற்றை நுகரும்போது ஏற்படும் உணர்வை ஏற்கனவே உங்கள் நினைவில் உள்ள வாசனையுடன் ஒப்பிட்டு சீர்செய்யும் பயிற்சியே.

உதாரணத்திற்கு நீங்கள் காப்பியை குடிக்கும்போது அதன் வாசனை உங்களுக்கு தெரியும். வைரஸ் தாக்கத்தின் பின்பு காப்பி ஆனது முன்பு போல மணம் இருக்காது.

மீண்டும் மீண்டும் காப்பியை நுகர்ந்து, பார்த்து, பழைய நினைவுகளை மீட்டி குடிக்கும்போது அனேகமானவர்கள் அந்த இழந்த வாசனை குறிப்பிடத்தக்க அளவுக்கு பழைய நிலைக்குத் திரும்புகிறது.

இதேபோன்று நீங்கள் அறிந்த வாசனைத்திரவியங்கள், உதாரணமாக கொத்தமல்லி எலுமிச்சை கறிவேப்பிலை என பலதரப்பட்ட வாசனைகளை மீண்டும் மீண்டும் நுகர்ந்து பார்த்து பயிற்சி செய்யும்போது நீங்கள் அறிந்த வாசனை ஆனது மூளையில் மறு உருவாக்கத்திற்கு உள்ளாகின்றது.

Seyali