சிங்கள இனவாதிகளை கண்டு அஞ்சும் கொரானா,தமிழர் மேல் திடீர் பாசம்

68

இந்த முறை பாராளுமன்ற தேர்தல் உங்கள் வாக்கு யாருக்கு...

View Results

Loading ... Loading ...

நேற்றையதினம் நைனாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு சென்ற பக்தர்களை பொலிஸாரும், கடற்படையினரும் ஆலயத்திற்குள் உள் செல்ல அனுமதிக்க வில்லை இதனால் பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.இருந்தபோதிலும் ஆலயத்திற்குள் குறிப்பிட்ட நபர்களுக்கு மேல் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்தது, இதனால் பக்தர்கள் கடும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

இதேவேளை இனவாதி மஹிந்த தலைமையிலான கூட்டங்கள் எந்தவித கட்டுபாடுகளும் இன்றி தென்பகுதியில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடதக்கது.தென்பகுதியாருக்கு ஒரு சட்டம், யாழ் மக்களுக்கு ஒரு சட்டமா என்று நீங்கள் நினைக்கலாம்,தென் பகுதியில் இனவாத அரசியல்வாதிகள் மக்களை ஒன்று திரட்டி கூட்டம் கூடினால் கொரோனா தொற்று பரவாது.காரணம் கொரானா அவர்களின் கொடூரத்தை கண்டு அஞ்சுகிறது.அதனால் அரசும் ஏவல்துறையும் அவர்களை கண்டு கொள்வதில்லை.கொரானாவை தாம் கொடியவர்கள் என்பதால் அது தம்மிடையே பரவாது என்று அவர்கள் நம்புகின்றனர்.அண்மையில் சிங்கள இனவாத அரசியல்வாதி ஒருவர் புலிகளை தோற்கடித்தது போன்று கொரானாவையும் தோற்கடிப்போம் என்று கூறியிருந்தார்.அந்த வகை உசுப்பேத்தல்கள்தான் இனவாத சிங்களவர்களை கொரானாவுக்கு எதிராக கொதித்தெழ வைத்திருக்கின்றது.