சிறிலங்காவில் கொரானா இரண்டாம் சுற்று பரவல்,விமான நிலையத்தில் சோதனை

விமானநிலையத்திலேயே கொரோனா வைரஸ் சோதனை- அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

சிறிலங்காவில் இரண்டாவது சுற்று கொரோனாவைரஸ் பரவலை தடுப்பதற்காக வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை அவர்கள் இலங்கைக்குள் நுழைந்தவுடனேயே கொரோனா வைரஸ் சோதனைக்கு உட்படுத்தவேண்டும் என இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இரண்டாம் சுற்று பரவலை தடுப்பதற்காக ஐந்து பரிந்துரைகளை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சமர்ப்பித்துள்ளது.

கடற்படையினர் மற்றும் வெளிநாட்டவர்களிடமிருந்து வைரஸ் சமூகததிற்குள் பரவுவதை தடுப்பதற்காக தெளிவான திறமையான திட்டங்கள் அவசியம் என அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து அழைத்துவரப்படுபவர்கள் இலங்கைக்குள் வந்தவுடன் கொரோனா வைரஸ் சோதனையை மேற்கொள்ளுங்கள் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை முதலில் சோதனைக்கு உட்படுத்துங்கள் அதன் பின்னர் அவர்களை தனிமைப்படுத்தல் முகாம்களிற்கு அனுப்புங்கள் என அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை நேரடியாக தனிமைப்படுத்தல் முகாமிற்கு அழைத்துச்செல்லும் நடவடிக்கையே தற்போது முன்னெடுக்கப்படுகின்றது.

இவர்களுடன் தொடர்பிலிருப்பவர்களையும் தொடர்ச்சியாக சோதனையிடவேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

விமானபணியாளர்கள், விமானநிலைய பணியாளர்கள்,சுகாதார உத்தியோகத்தர்கள் காவல்துறையினர் மற்றும் முப்படையினரை தொடர்ச்சியாக கொரோனா வைரஸ் சோதனைக்கு உட்படுத்தவேண்டும் என அரச மருத்;துவ அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.