தேர்தல் முடிவு : கொரானா-கொத்தடிமைதனதுடன் வாழ பழகும் ஈழதமிழர்…

362

2020 பாராளுமன்ற தேர்தல்கள்,கூட்டமைப்பு தமிழரசுகட்சிக்கு பின்னடைவாக இருந்தாலும்,தமிழர்களுக்கு வேறு ஒரு தெரிவை / ரிஸ்க் எடுக்க விருப்பமில்லாமையும்,கூட்டமைப்பை தாண்டிய வாக்குகள்,ஈபிடிபி அங்கயன் பக்கம் சென்றுள்ளமை,வேலைவாய்ப்பின்மையையும் சுட்டிகாட்டுகின்றதுடன்.வேலைவாய்ப்பில்லாமல்தான் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் தூக்கினார்கள் என்ற சிங்கள இனவாத கூட்டத்தின் பரப்புரைக்கு செலவில்லாமல் வேலைபார்க்க இந்த கூட்டம் ஓசியில் அரச வேலை பார்த்து மாச சம்பளத்துடன்,சீதனம் வீடு வாங்கி கல்யாணம் செய்யும் பாரம்பரிய கோப்பை கழுவும் கொத்தடிமை மனப்பான்மையில் ஊறிவிட்டது என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

அறமே இல்லாத தமிழரசு,கூட்டமைப்பு வேட்பாளர்களின் அடாவடிதனங்களை பொறுக்க முடியாத ஒரு கூட்டம் நேரடியாக மாற்று என்பதை தாண்டி அரசகைகூலிகளிடம் சரண்டைந்துள்ளது.அம்மக்களை குற்றம் கூறி பயனில்லை.நாம் எல்லோருமாக சேர்ந்து தேர்ந்தெடுத்தவர்கள்,எதையும் எவருக்கும் செய்யாது போனாலும் அதனால் எல்லோரும் ஒரேமாதிரி பாதிக்கப்பட்டபோவதில்லை..ஒருவர் வேலை இருக்கலாம் சொந்த தொழில் இருக்கலாம்,அவருக்கு அரசில் தேர்வு இரண்டாம்கட்டமாக இருக்கும்,ஆனால் நாளாந்த வாழ்க்கை போராட்டத்தை கொண்டவர்களுக்கு,அவர்களின் மனநிலையில் இவ்வாறு இவர்களால் பாதிக்கப்படும் போது அவர்கள் பக்கம் மாறிவிடுகிறார்கள்..இதை உணர்ந்தே சிங்கள அரசு அழகாக காய் நகர்த்தியுள்ளது.ஈபிடிபிக்கு கணிசமான வாக்குகள்,அங்கஜனுக்கும் கிடைத்துள்ளது.இதனை கடைசி நேரத்தில் உணர்ந்து கொண்டே,தமிழரசு கூட்டமைப்பு கட்சியும் அபிவிருத்தி அரசியலை கையில் எடுத்து தமிழரை ஏமாற்ற பார்த்தது,ஆனால் கணிசமான மக்கள் இவர்களிடம் ஏமாற தயாராகவில்லை என்பதை தேர்தல் முடிவுகள் காட்டியுள்ளன.இந்த குரூர இனம் முற்பாதியில் செய்தவற்றை பிற்பகுதியில் அனுபவிக்கின்றது என்பதுடன்,அதற்கு பொருத்தமானவர்கள் அதிகாரத்துக்கு வந்து கொண்டிருப்பதும்,கூன் விழுந்த எதிர்காலம் ஒன்று ஆங்கே தெரிகின்றது.