கொரான நோயாளிகள் தொடர்பில் இலங்கை அமைச்சர் கடுமையான அதிருப்தி

124

வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வந்து, தங்களை தடுப்பு முகாமுக்கு அனுப்ப வேண்டாம் என்று ஆர்ப்பாட்டம் செய்வோர், தனிமைப்படுத்தும் மய்யங்களிலிருந்து தப்பியோடுவோர் ஆகிய அனைவரும், தேசத் துரோகிகளாக கருதப்படவேண்டும் என போக்குவரத்து சேவைகள் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டின் தற்போதைய நிலைமைக்கு, அவர்களே காரணம் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சில் இன்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் பின்னர், ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டோருக்கு எதிரான சட்டநடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கும் என்றும் நாட்டின் தற்போதைய நிலைக்கு, இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டோரே பொறுப்புக்கூற வேண்டும் என்றும் அவர் கூறினார்.

முப்படையினர், சுகாதார சேவையினரின் அர்ப்பணிப்பைப் பாராட்டிய அவர், மற்றைய நாடுகளுடன் ஒப்பிடும்போது, நம் நாட்டிலுள்ள முப்படையினரும் சுகாதார சேவர்களுமே, மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.