20 நிமிடத்தில் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்…

67

Île-de-Franceக்குள் மூக்கிலிருந்து நீர் எடுத்து பரிசோதனை

Île-de-Franceக்குள் அதிவேக கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என சுகாதார அமைச்சர் அறிவித்துள்ளார்.

கொரோனா தொற்றின் வேகம் Île-de-Franceக்குள் துரிதமாகியுள்ள நிலையில், பரிசோதனைகளையும் மிக வேகமாக மேற்கொள்ள வேண்டிய தேவை உள்ளதாக தெரிவித்த சுகாதார அமைச்சர் OLIVIER VÉRAN, (09/09/2020) புதன்கிழமை முதல் Île-de-Franceக்குள் மிக வேகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அறிவித்துள்ளார்.

இதுவரை, கொரோனா பரிசோதனையின் முடிவுகள் 36 மணிநேரங்களின் பின்னரே வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 15 இல் இருந்து 20 நிமிடங்களுக்குள்ளாக முடிவுகள் தெரிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஆனால் இவ்வகை முடிவுகள் PCR எனப்படும் இரத்த மாதிரிகளை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் சோதனைகளாக இல்லாமல், மூக்கில் இருந்து வழியும் நீரை மாதிரிகளாக பயன்படுத்தி பரிசோதனை மேற்கொள்வார்கள் எனவும், முடிவுகள் கடுகதி வேகத்தில் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.