ஒருவருக்கு 1 ஒரு கிலோ கோதுமை மா திட்டம் தாய்தேசத்தில் அசத்தும் போராளிகள்,இளைஞர்கள்

138

கொரானா மற்றும் ஊரடங்கு உத்தரவினால் பாதிக்கப்பட்டுள்ள யாழ் மக்களுக்கு ஒரு பயனாளிக்கு ஒரு கிலோ கோதுமை மா என்ற திட்டம் ஒன்று கடற்புலி போராளி ஒருவரும் இளைஞர்களும் சேர்ந்து செயற்படுத்தி வருகின்றனர்,இதுவரை 1000 கிலோவை 1000 பேரை தொட்டு நிற்கிறது.

பசி நீக்கும் திட்டத்தின் வெற்றியில் நிற்கிறது. யாழ் , கோவிலாக்கண்டி மறவன்புலவு இரண்டு பிரதேசத்திலும் முழுமையாக முடிக்க, மறவன்புலவு பிரதேசத்தில் 90 வீதம் முடிக்கப்பட்டு இருக்கின்றது.பிரதேசத்தை சேர்ந்த தன்னாளர்வாளர்களின் அதிரடியான கொடையில் இந்த இலக்கை அடைந்து நிற்கின்றது

குறிப்பிட்ட சில இளைஞர்களின் இந்த விடா முயற்சியில் ஒரு பிரதேசத்தில் இவ்வளவு மக்களின் பசி தீர்க்கப்படுகின்றது.இவ்வாறே ஈழத்தின் மற்றைய பிரதேசங்களிலும் உள்ள இளைஞர்கள் தமக்குள் ஒன்றிணைந்து மக்களின் அவலங்களை தீர்க்க நமக்குள் ஒன்றிணைந்து நமது மண்ணுக்காக வேலை செய்யவேண்டும்.

இவற்றை ஒன்றிணைத்து செய்து கொண்டிருப்பர் கடற்புலி போராளி கடலரசன் என்று அறியப்படுபவர்.உங்கள் பிரதேசங்களிலும் இந்த மாதிரி அவலங்களை கண்டும் காணாமல் கடக்காமல் இளைஞர்கள் தங்களுக்குள் ஒருங்கிணைந்து மக்கள் ஒன்று சேர்ப்பதன் மூலமே நிலையான மகிழ்வான எதிர்காலத்தை நோக்கி எமது தேசத்தை வழிநடத்தப்படவேண்டும்