முல்லைதீவில் கொரானா தாக்குதல் – நூற்றுகணக்கான சிறிலங்கா படையினர் பாதிப்பு

69

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடமையாற்றும் படையினரில் சுமார் 60 பேர் விடுப்பில் நின்று கடந்த 21ஆம் திகதி பேருந்து ஒன்றில் கடமைக்கு மீளத் திரும்பிய நிலையில் அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்

முல்லைத்தீவு மாவட்டத்துக்கு அவர்கள் திரும்பிய பேருந்தில் பயணித்த #வெலிசறை கடற்படை முகாமில் பணியாற்றும் கடற்படைச் சிப்பாய்க்கு #கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கையை இராணுவத்தினர் முன்னெடுத்துள்ளனர். அவர் அநுராதபுரம் சிறிபுர என்ற இடத்தில் இறங்கியுள்ளார்.

புதுமாத்தளன் பகுதில் உள்ள இராணுவ பயிற்சி முகாமில் புதிதாக அமைக்கப்பட்ட தனிமைப்படுத்தல் முகாமில் 60 படையினரையும் தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களில் 38 பேர் இன்று காலை அந்த தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடமையாற்றும் படையினர் விடுப்பில் வீடு சென்ற நிலையில் கடந்த 21ஆம் திகதி பேருந்து ஒன்றில் கடமைக்குத் திரும்பியுள்ளனர். வெலிஓயாவைச் சேர்ந்த தனியார் ஒருவரின் பேருந்தில் அவர்கள் அழைத்துவரப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் அந்தப் பேருந்து வெலிஓயா, முல்லைத்தீவு, கேப்பாபுலவு, புதுக்குடியிருப்பு படை முகாங்களுக்குச் சென்று படையினரை இறக்கியுள்ளது. சுமார் 60 படையினர் இவ்வாறு முல்லைத்தீவு மாவட்டத்தில் குறிப்பிட்ட முகாம்களில் இறங்கியுள்ளனர்.

தமிழர் நிலங்களில் தொடர்ச்சியாக இராணுவ மயமாக்கும் சிங்கள சிறிலங்கா அரசின் ஒரு அங்கமாக போர் நடைபெற்ற தமிழர் தாயகபகுதிகளில் இருந்த படையினரே கொரானாவின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர்.இப்படியாவது தமிழர் நிலங்களை விட்டு சிறிலங்கா சிங்கள இராணுவம் வெளியேற்றபடுமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்

– கரன்