முக கவசம் ( மாஸ்க்) அணியாது நடமாடுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை

47

ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் தேவைகளுக்காக பொது வெளியில் நடமாட வருபவர்கள் முக கவசம் அணிந்திருக்க வேண்டும். தவறும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ் பொலிஸார் வாகனத்தில் அறிவித்தல் விடுத்து வருகின்றனர்.

போக்குவரத்து.. வர்த்தக நிலையங்களில் முண்டியடிக்காது இடைவெளி விட்டு நகர்த்தும் பணியிலும் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.அதி காலையிலேயே யாழ் நகரில் மக்கள் குவிந்தவண்ணம் உள்ளனர்.