கொரானா அச்சம் இராமநாதபுரம் கீழக்கரை ஊர் இழுத்து மூடல்

72

பீலிஜமால்

சும்மா பேரை கேட்டாலே பர்மா பஜார் அலறும். கீழக்கரை பூர்வீக இஸ்லாமியர். பெரும் பணக்காரர். வயது 70 ! சுறா போன்ற பெரிய வகை மீன்களின் இறக்கைகளை மட்டுமே ஏற்றுமதி செய்யும் தொழில் நடத்தி வந்தார் ஜமால். இந்த மீன் இறக்கைகளுக்கு பீலி என்று பெயர். அதனால் ஜமாலுக்கு பீலி ஜமால் என்கிறது பெயர் காரணம். ஆளும் கட்சி, எதிர் கட்சி, கோட்டை, காவல் துறை, நீதித் துறை, கஸ்டம்ஸ் – கார்கோ – சி அண்ட் எஃப் என சகல மட்டத்திலும் பெரும் செல்வாக்கு கொண்டிருந்தவர்.

கடந்த 15 ஆம் தேதி துபாய் சென்று வந்தார் ஜமால். அதையடுத்து சென்னை மண்ணடியில் கோரல் மெர்ச்சண்ட் தெருவில் உள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள் என்று நோட்டீஸ் ஒட்டியது சென்னை மாநகராட்சி. வீட்டுத் தனிமையில் இருந்த ஜமால் மூச்சுத் திணறலுக்காக மார்ச் 27 ஆம் தேதி விஜயா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது உடல் நிலையை பரிசோதித்த டாக்டர்கள், அவரை ஸ்டான்லி மருத்துவமனையில் சேரச் சொல்லியுள்ளார்கள். பின் ஸ்டான்லி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் ஜமால். மூச்சுத் திணறல், வெளிநாட்டுப் பயணம் என்பதை வைத்து ஜமாலுக்கு கொரோனா சோதனை செய்துள்ளார்கள் ஸ்டான்லி மருத்துவமனையில். அவரது ரத்த, சளி மாதிரி கொரோனா டெஸ்டுக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில் ஏப்ரல் 2 ஆம் தேதி ஸ்டான்லி மருத்துவமனையில் ஜமால் காலமானார்.

உடனடியாக அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு ஜமாலுக்கு இருக்கும் அரசியல் செல்வாக்கும் அதிகாரிகள் செல்வாக்கும் ஸ்டான்லி மருத்துவமனை டாக்டர்களுக்கு நெருக்கடி கொடுத்தன. ஏற்கனவே தனிமைப்படுத்துதலில் இருந்தவர், வெளிநாட்டில் இருந்து வந்தவர், மூச்சுத் திணறலால் அட்மிட் செய்யப்பட்டவர், அவருக்கு கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டு முடிவு இன்னும் வரவில்லை…என முழுக்க முழுக்க சந்தேகத்துக்கு இடமான நிலையில் ஸ்டான்லி மருத்துவமனை டீன் டாக்டர் பாலாஜி (ஜெயலலிதா அப்பலோ மருத்துவமனையில் இருந்தபோது கை ரேகை வாங்கினாரே அதே டாக்டர்தான்) ஜமாலின் உடலை அவரது சொந்த ஊரான கீழக்கரையில் கொண்டு சென்று அடக்கம் செய்யவும் ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்தே அனுமதி கொடுத்திருக்கிறார்.

இறந்த ஜமாலை எடுத்துச் செல்ல அமரர் ஊர்தி, அதோடு அவரது குடும்பத்தினர் 10 பேர் கீழக்கரை செல்வதற்கு ஒரு மாருதி ஈகோ, ஒரு இன்னோவா காரில் செல்வதற்கு ஸ்டான்லி மருத்துவமனையின் இருப்பிட மருத்துவ அலுவலகத்தில் ஏப்ரல் 2 ஆம் தேதியே கையெழுத்திட்டுக் கொடுத்திருக்கிறார்கள்.

இதையடுத்து ஜமாலின் உடல் 2 ஆம் தேதி மாலை சென்னையில் இருந்து கீழ்க்கரைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. கீழக்கரைப் பணக்காரர்கள் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் நூற்றுக்கணக்கில் கூடி வந்து அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள்…இப்போது, இறந்து போன பீலி ஜமால் பாய்க்கு “கொரானா டெஸ்டில் பாஸிட்டிவ்” என்று தெரிய வர கீழக்கரை எல்லைகள் அவசரமாக அடைக்கப்பட்டு விட்டனவாம்.

இறுதி அஞ்சலியில் கலந்து கொண்ட அத்தனை பேரும் கலக்கத்தில் வெளிறிப் போய் இருக்கிறார்களாம். மேலும் இராமநாதபுரம் MLA மணிகண்டனும் இந்த இறுதி சடங்கில் கலந்து கொண்டதாக தகவல்கள். ஆம்புலன்ஸ் டிரைவரை தேடிக் கொண்டிருக்கிறார்களாம். இப்போது கீழக்கரையே கிலியில் இருக்கிறது.

இயற்கை பதினைந்தே நாட்களில் மனித வாழ்க்கையை எப்படியெல்லாம் புரட்டி போட்டு விடுகிறது.

Stay Home

இது தான் இராமநாதபுரம் உண்மை இப்போது நிலவரம்