பெப்பிரவரி 29 – அமெரிக்கா தனது முதலாவது கோவிட் இறப்பைப் பதிவு செய்தது.
மார்ச் 17 – அமெரிக்காவின் கோவிட் இறப்புக்கள் 100 எண்ணிக்கையைக் கடந்தன
மார்ச் 29 – 3,518 அமெரிக்க கோவிட் இறப்புகள். 2001 செப்டம்பரில் இரட்டைக் கோபுரம் உட்பட நடாத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலின் இறப்பு எண்ணிக்கையைக் கடந்தது.
ஏப்ரல் 5 – 12,245 அமெரிக்க கோவிட் இறப்புக்கள். மேற்கு ஆபிரிக்காவில் 2014-16 காலப்பகுதியில் தோற்றம்கண்ட இபோலா இறப்புகளின் எண்ணிக்கையைக் கடந்தது.
ஏப்ரல் 17 – 37,428 அமெரிக்க கோவிட் இறப்புக்கள். கொரியப் போரில் ஏற்ப்பட்ட அமெரிக்க துருப்புகளின் இறப்பு எண்ணிக்கையைக் கடந்தது.
ஏப்ரல் 28 – 58,355 அமெரிக்க கோவிட் இறப்புகள். அமெரிக்க துருப்புகளின் வியட்நாம் போரிலான இறப்புகளின் எண்ணிக்கையைக் கடந்தது.
மே. 2 – 66,369 அமெரிக்க கோவிட் இறப்புகள். அமெரிக்க துருப்புகளின் வியட்நாம் அவ்கானிஸ்தான் ஈராக் போர்களிலான மொத்த இறப்புகளின் எண்ணிக்கையைக் கடந்தது.
மே. 9 – 78,795 அமெரிக்க கோவிட் இறப்புகள். 2002-03 காலப்பகுதியிலான சார்ஸ் வைரஸ் தொற்றின் உலகளாவிய இறப்புகளை விட 100 மடங்காகியது.
மே. 22 – 95,979 அமெரிக்க கோவிட் இறப்புகள். அமெரிக்க வியட்நாம் கொரிய போர்களிலான மொத்த இறப்பு எண்ணிக்கையைக் கடந்தது.
மே. 27 – அமெரிக்கா கோவிட் இறப்புகள் ஒரு லட்சத்தைக் கடந்தது.
நன்றி…