கொரானாவுடன் யாழில் மதம் பரப்பிய சுவிஸ் போதகர்

269

கொரோனா தொற்றோடு யாழ்ப்பாணத்திற்கு மதம் பரப்ப வந்து சென்ற பாஸ்டர் சுவிஸ் நாட்டில் ஆபத்தான கட்டத்தில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 15 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் உள்ள பிலதெல்பியா சபைகளில் இவர் கடுமையான காச்சலுடன் ஜெபக்கூட்டங்களில் கலந்துகொண்டிருந்தாக தகவல். இவர் மூலமாக அந்த ஜெபக்கூட்டங்களில் கலந்துகொண்டிருந்தவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளதால் அச்சபைகளை சேர்ந்தவர்களை கண்டறிய பொலிசார் தீவிர நடவடிக்கை.

இத்தாலியில் தீவிரமாக கொரோனோ பரவ இவ்வாறான சபைகள் காரணமாக இருந்துள்ளது. கொரோனோவில் இருந்து கர்த்தர் காப்பாற்றுவார் வாருங்கள் என யாழ்ப்பாணம் உட்பட இலங்கையின் பல பகுதிகளில் இவ்வாறான சபைகள் இம்மாதம் பல ஜெபக்கூட்டங்களை நடத்தியுள்ளது.

இதே போல் இவர்கள் சுவிஸ் பிரான்ஸ், உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் ஜெபகூட்டங்களை நடத்தியுள்ளனர்.இவர்களை சேர்ந்த மக்கள் அனைவருக்கும் யாழ்ப்பாணம்,ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்கள் தங்களை மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்தி கொள்வது சிறந்ததாகும்.இவர்களை தெரிந்தவர்கள் தத்தமது நாடுகளில் இவர்கள் பற்றிய தகவல்களை நாட்டு காவல்துறைகளுக்கு தெரிவித்து கொரானா பரவுதலை கட்டுபடுத்த உதவ வேண்டுகிறோம்.