பிரித்தானியாவில் 24 மணித்தியாலத்தில் அதிகபட்சமாக 936 மரணங்கள்

57

பிரித்தானியாவில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 936 பேர் மரணித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பிரிட்டனின் மொத்த எண்ணிக்கையாக 7097 மரணங்கள் பதிவாகி உள்ளன.

பிரித்தானியாவில் கோவிட் -19 நெருக்கடியில் இதுவரை நிகழ்ந்த தினசரி மரணங்களில் இன்றய 936 இறப்புகள் தான் அதியுச்சமான இறப்புகளின் எண்ணிக்கையாகும்.

பிரிட்டனில் வைரஸ் தொற்றுக்கான பரிசோதனையில் இதுவரை அறுபதாயிரத்திற்கும் அதிகமானவர்கள் இனம் காணப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது