பிரித்தானியாவில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணித்தியாலத்தில் 917 இறப்புக்கள்

51

பிரித்தானியாவின் கொரோனா தொற்று இறப்பு எண்ணிக்கை கடந்த 24 மணித்தியாலத்தில் 917 அதிகரித்து மொத்த இறப்பு எண்ணிக்கை 9,875 ஆக உயர்ந்துள்ளது.

இதன்படி தொற்று ஆரம்பமானது முதல் வெள்ளிக்கிழமை (10-04-2021) மாலை 5 மணிவரை கொரோனா வைரஸுக்கு பரிசோதனை செய்யப்பட்டது வரையான காலப் பகுதியில் மொத்தம் 9,875 தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் இறந்ததாக தெரிவிக்கப்பட்டள்ளது.

பிரித்தானியாவில் சனிக்கிழமை காலை 9 மணி நிலவரப்படி 334,974 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, இதில் வெள்ளிக்கிழமை 18,091 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

பரிசோதிக்கப்பட்ட 269,598 பேரில், 78,991 பேர் கோவிட் -19 தொற்று இருப்பதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.