பூமி தாயை மகிழ்விக்கும் கொரானா – கதறும் மனித வைரஸ்

303

கொரானா நோய் பரவல் காரணமாக மனிதர்கள் பாதிக்கப்பட்டு வீடுகளில் முடங்க,பூமி தாய் மகிழ்ச்சியாக இருக்கின்றதை பல விஞ்ஞான ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.மனிதர்கள் தங்களை மட்டும்தான் உலகம் என்று எண்ணி Eco சிஸ்டத்தை Ego சிஸ்டமாக்கி இதுவரை விளையாடி விட்டு இன்று கொரானா வந்ததும் பெரு நகர அடிமை வாழ்க்கையை விட்டு ஓடவும் முடியாமல் ஒளியவும் முடியாமல் முடங்கியுள்ளனர்,இந்நிலையில் சட்டலைட்டுக்கள் பூமியில் காற்று மாசு மிகவும் குறைந்திருப்பதையும்,காபன்டைஒக்சைட் வெளியீடு குறைஞ்சிருப்பதையும் தொடர்ச்சியாக காட்டுகின்றன.அண்மைய காலப்பகுதியில் கடந்த 20 வருடங்களில் காலநிலை மாற்றம் உலகின் திக சவாலான ஒன்றாக மாறிவிட்டிருந்தது.

இத்தாலி வெனிஸ் கால்வாய் நீர் சுத்தமாகியுள்ளது

இத்தாலி கடற்கரைகளில் டொல்பின்கள் சந்தோசமா நீந்தி விளையாடுகின்றன

ஜப்பான் வீதிகளில் மான்கள் சுதந்திரமாக திரிகின்றன.

தாய்லாந்தில் குரங்குகள் வெளியில் வருகின்றன.

பூமி வளிமண்டல மாசு தன்மை மிக வேகமாக குறைந்துள்ளது.

பூமி தாய் குணமடைந்து வருகிறாள்.

இவை அனைத்தையும் வைத்து பார்க்கும் போது இங்கு மனிதர்கள் மிகப்பெரும் வைரஸ்கள் என்பது தெரிய வருகின்றது.பூமியை இதுவரை அழித்த மனித வைரசுகள்.