கொரோனா வைரசை தொடர்ந்து சீனாவில் பரவும் ‘புருசெல்லா’ நோய்!

78

கொரோனா வைரசை தொடர்ந்து சீனாவில் ‘புருசெல்லா’ என்னும் நோய் பரவி வருகிறது. இதுவரை 3,245 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. வடமேற்கு சீனாவின் குவாங்சோ மாகாண தலைநகரான லாங்ஜோவில் உள்ள சோங்மு லாங்ஜோ உயிரியல் மருந்து நிறுவனத்தில் இருந்து கடந்த ஆண்டு ஜூலை-ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் புருசெல்லா பாக்டீரியா கசிந்துள்ளது. இதனால், மால்டா பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் கொடிய புருசெல்லா பாக்டீரியா கசிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை, 3,245 பேருக்கு புருசெல்லா பாக்டீரியா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாக லாங்ஜோ சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இந்த பாக்டீரியா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு தலைவலி, தசை வலி, காய்ச்சல், சோர்வு மற்றும் நாள்பட்ட மூட்டுவலி ஆகியவற்றால் பாதிக்கப்படலாம் என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (சிடிசி) தெரிவித்துள்ளது. இருந்தும், மனிதனுக்கு மனிதனுக்கு பரவுவது அரிதானது என்றும், பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட உணவுகளை சாப்பிடுவதன் மூலம் இந்நோய் பரவக்கூடும் என்றும் விலங்குகளால் பரவக் கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே, சீனாவின் வுகானில் தோன்றி பரவிய கொரோனாவால் உலகமே நிலைகுலைந்துள்ள நிலையில், தற்போது புதிய பாக்டீரியா தொற்றால் மக்களிடையே அச்சம் ஏற்பட்டு வருகிறது.