குடும்பத் தகராறு , ஒருவர் படுகொலை – யாழில் பயங்கரம்

76

குடும்பத் தகராறு, ஒருவர் அடித்தும் வெட்டியும் படுகொலை

எழுதுமட்டுவாள் தெற்கு மருதங்குளம் பகுதியில் குடும்பத்தகராறு காரணமாக ஒருவர் அடித்தும் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இன்று இரவு 8 மணியளவில்  மருதங்குளம் பகுதியைச் சேர்ந்த சிவகுமார்(40) என்பவரே சகோதரர் முறையான உறவினர்களால் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவரின் மனைவி காயங்களுடன் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொலை செய்ததாக கூறப்படும் மூவரும் சகோதர்கள் எனவும் அவர்களில் ஒருவர் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையிலும் இருவர் யாழ் போதனா வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப் படுகின்றது.
மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழர்கள் தங்களுக்குள் சண்டை போட காட்டிகொள்ளும் வேகத்தில் நூறில் ஒரு பங்கை இன விடுதலை போரில் காட்டியிருந்தால்,இன்று தமிழீழம் எங்கள் கைகளில் தவழ்ந்திருக்கும்.கூலுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்பது போல்,சமூக ஒற்றுமையும் இல்லை,தனிநாட்டுக்கும் ஆசை என்றால்.என்ன செய்வது? ஒரு வீடுதான் நாட்டின் அடிப்படை அலகு,வீரம் போராட்டம் ஒற்றுமை எல்லாம் அங்கிருந்துதான் வரவேண்டும்,இல்லையெனில் நாடு இல்லை,கடைசிவரை ஐரோப்பா அமெரிக்க சிறிலங்கானு அகதிகளா இருந்து கத்திவிட்டு சாக வேண்டியதுதான்