கொரோனாவால் இறந்துவரும் முதியவா்கள்

19

70 வருட திருமண வாழ்க்கை கொரோனாவால் முடிந்தது: கைகளை கோர்த்தபடி இறந்த தம்பதிகள் இவர்கள் தான்.

பிரித்தானியாவில் நாளுக்கு நாள் பல நூறு முதியவர்கள் கொரோனாவால் இறந்து வருகிறார்கள்.இதில் 90% சத விகிதமானவர்கள் 65 வயதை கடந்தவர்களாகவே உள்ளார்கள்.

தற்போது முதியவர்கள் என்ற ஒரு சமுதாயத்தையே கொரோனா அழித்து வருகிறது என்று தான் சொல்லவேண்டும்.டெரிக் மற்றும் மாக்கிரட் ஆகியோர் கடந்த 70 ஆண்டுகளாக கணவன் மனைவியாக வாழ்ந்து வந்துள்ளார்கள். அவர்களுக்கு வயது 91. நல்ல உடல் நிலையில் இருந்த அவர்களை கொரோனா தாக்கியுள்ளது.இருவருக்கும் கொரோனா தாக்கம் ஏற்பட்டு மெல்ல மெல்ல பரவி, இறுதியில் அவர்கள் பிழைக்க மாட்டார்கள் என்ற நிலைக்கு சென்றுவிட்டார்கள்.

இதனால் தான் இறக்கும் போது மனைவி அருகே இறக்க விரும்புவதாக டெரிக் கூறியுள்ளார்.இதனை அடுத்து அவரது மனைவி மாக்கிரட்டை அவர்கள் அருகில் உள்ள கட்டிலுக்கு மாற்றி இருந்தார்கள். என்ன மாயமோ மந்திரமோ தெரியவில்லை. இருவரும் கைகளை கோர்த்தபடி ஒரே நேரத்தில் உயிரிழந்து விட்டார்கள்.

இதனை நேரில் பார்த்த தாதி ஒருவர் மனம் உடைந்து கதறி அழுதுள்ளார். எத்தனை சாவை தான் நாங்கள் இனியும் பார்க்கப் போகிறோமோ தெரியவில்லை என்று அவர் கண்கள் கலங்கி கூறு காட்சிகள்.பிரித்தானியாவை உலுக்கியுள்ளது.

-ஈழம் ரஞ்சன்-