தமிழகத்தில் மே 31-ம் திகதி வரை நீளும் பொதுமுடக்கம்

65


சென்னை: தமிழகத்தில் மே 31-ம் தேதி வரை பொதுமுடக்கத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இன்று நள்ளிரவு 12 மணியுடன் ஊரடங்கு முடியும் நிலையில் மே 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் தளர்வு இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.

வெளி மாநில மக்கள் தமிழகத்தை விட்டு வெளியேற தொடர்ந்தும் பிரச்சினைகள் முகங்கொடுத்தும் வேளையில்,வெளிமாநிலத்தில் தங்கியுள்ள தமிழக மக்கள் திரும்பி வரவும் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர்.வேலைவாய்ப்பின்மை,பொருளாதார மந்தம் அதிகரித்து மக்கள் சொல்லெனா துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

மதுபான கடைகளில் மக்கள் கூட்டம் அள்ளுவதால்,அதற்காக ஐந்து நிறத்தில் டோக்கன் கொடுத்து வருகின்றது.அரசுக்கு குடிமக்கள் மீது இருக்கும் அக்கறை பாசத்தில் பத்தில் ஒரு பங்கு கூட பொது மக்கள் மீது இல்லை.