யாழ் மக்களை உண்மை பேச கோரிய சிறிலங்கா பாதுகாப்பு செயலாளர்,மதம் மாற்றும் ஒட்டு குழுக்களால் யாழுக்கு ஏற்பட்ட இழிவு

190

தற்போதைய சூழ்நிலையில் யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு சட்டத்தினை அகற்றுவது என்பது சாத்தியமற்ற விடயம் என சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரத்ன யாழில் தெரிவித்தார்.

வடக்கிலுள்ள அப்பாவி மக்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு பாதுகாப்பு அமைச்சு ஆகிய எங்களிடம் உள்ளது. எனவே கொழும்பைப் போல தொற்று அதிகம் உள்ள இடமாக யாழ்ப்பாணம் காணப்படுகின்றது எனவே தற்போதைய நிலைமையில் யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு அகற்றுவது என்பது சாத்தியமற்ற விடயம் எனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் யாழ்ப்பாணத்தில் வைத்து தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்..

யாழ்ப்பாண மக்களுக்கு நான் இரண்டு கோரிக்கைகளை முன் வைப்பதாக கமல் குணரத்ன தெரிவித்தார்

  • ஒன்று ஊரடங்கு வேளையில் வீடுகளில் தனிமையாக இருங்கள்.
  • மற்றையது உண்மையை பேசுங்கள்.

ஏனெனில் நாங்கள் உங்களுக்காக சேவையாற்ற தயாராக இருக்கின்றோம் எனினும் நீங்கள் உண்மையைக் கூறாது விட்டால் நாம் எந்த வித செயற்பாட்டையும் ஈடுபட முடியாது எனவே வடக்கில் உள்ள மக்களிடம் நான் இரண்டு கோரிக்கைகளை முன்வைக்க விரும்புகின்றேன் எனவும் சிறிலங்கா பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார்.

யாழில் கோரானா பரவியமைக்கு மொத்த பொறுப்பும் கிறிஸ்தவ மதம் மாறிய,மாற்றுகின்ற கும்பலினை சேர்ந்தவர்களே , தொடர்ச்சியாக கொரானா தாக்கத்துக்கு உட்பட்டு வரும் வேளையில் அவர்களை பொய் பேசி மக்களினுள் மறைந்து வாழாமல்,உண்மை பேசி ஒத்துகொண்டு உரிய கொரானா தனிமைப்படுத்தல்களை மேற்கொள்ள ஒத்துழைக்க வேண்டும். அப்பாவி மக்களின் வறுமை துன்பம் என்பவற்றை பயன்படுத்தி மதம் மாற்றுபவர்கள் கொரானாவுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடித்து விட்டு பின்னர் மதம் மாற்றும் வேலைகளில் ஈடுபடவும் வேண்டுகோள் விடுத்தார்