கோரானா பரவுதலை கட்டுபடுத்தும் நோக்கிலும்,ஏற்கனவே கோரானா தாக்கம் உள்ளவர்களை கண்டறிந்து மருத்து சோதனைக்கு உட்படுத்தும் நோக்கில் இலங்கையில் நாடு முழுதும் மூன்று நாட்களுக்கு ஊரடங்கு அமுல் படுத்தப்பட இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.இன்று மாலை 6 மணிக்கு அமுலாகும் வகையில் செயற்படுத்தப்படுகின்றது.
இலங்கையில் இதுவரை 58 பேருக்கு கொரானா பரவியிருப்பதுடன்,234 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.600க்கு மேற்பட்டவர்கள் மருத்துவ முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.மக்கள் தமது அத்தியாவசிய பொருட்களை வாங்க கடைகளில் முண்டியடித்து கொள்வதுடன் தேவைக்கு அதிகமாக வாங்கி மற்றவர்களின் தேவைகளை அதிகரிப்பதுமான பதற்றங்கள் நாட்டில் பல்வேறு இடங்களில் காணப்படுவதும் குறிப்பிடதக்கது..