வைத்தியர் முரளியிடம் வசமாக சிக்கிக் கொண்ட அமைச்சர் டக்கிளஸ்?

57

கிழக்கு தொல்லியல் திணைக்களத்திற்கு தமிழரை தேடிய டக்ளஸ் மௌன விரதத்திலிருக்க திரியாய் உட்பட ஏனைய இடங்களில் அப்பாவித் தமிழர்கள் பாதிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமுதாய மருத்துவ நிபுணர் முரளி வல்லிபுரநாதன் தெரிவித்துள்ளார்.

செட்டிகுளம் முகத்தான் குளம் பகுதியில் இந்தப் படம் எடுக்கப்பட்டது. அரசாங்கம் தமிழருக்குரிய நியாயமான பிரதிநிதித்துவத்தை கிழக்கு தொல்லியல் செயலணியில் வழங்க தவறினாலும் அதில் அங்கம் வகிக்கும் தமிழ் பிரதிநிதிகளும் தமிழினதும் சைவத்தினதும் தொன்மையை உரியமுறையில் அரசாங்க தலைவர்களுக்கு எடுத்துக் கூறி நிலைநாட்டத் தவறினாலும் தமிழருக்காக குரல் கொடுக்கும் சிவில் அமைப்புகளும் மனித உரிமை செயல்பாட்டாளர்களும் இணைந்து தமிழ் தொல்லியல் நிபுணர்களையும் ஏனைய துறை சார் ஆய்வுகளில் அனுபவம் உடையவர்களையும் இணைத்து ஒரு சுயாதீன செயலணியை தமிழர் சார்பாக உருவாக்கி உண்மைகளை வெளிக்கொண்டுவந்து திரியாய் உட்பட ஏனைய இடங்களில் அப்பாவித் தமிழர்கள் பாதிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார்.

கிழக்கு செயலணிக்கு பொருத்தமான நபர் ஒருவரை தேடுவதாக அறிவித்த டக்ளஸ் தானாக முன்வந்த சமுதாய மருத்துவ நிபுணர் முரளி வல்லிபுரநாதனிற்கு பதிலளிக்க முடியாது மண்டியுள்ளார்.

இந்நிலையிலேயே திரியாய் உட்பட ஏனைய இடங்களில் அப்பாவித் தமிழர்கள் பாதிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கையினை சமுதாய வைத்திய நிபுணர் முரளி வல்லிபுரநாதன் விடுத்துள்ளார்.