வடக்கில் மேற்கொள்ளப்படும் அனைத்து அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும் தனக்கு தெரியப்படுத்தப்பட வேண்டுமெனவும் தனது அனுமதியுடனேயே அவை செயற்படுத்தப்பட வேண்டுமென மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் யாழ். மாவட்ட செயலருக்கு உத்தரவிட்ட விவகாரம் தொடர்பில் அமைச்சர் டக்களஸ் தேவானந்தா தனது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

அமைச்சர் டக்ளஸின் முறைப்பாட்டை அடுத்து ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அனைத்து மாவட்ட குழுக்களின் தலைவர்கள் மற்றும் மாவட்ட செயலர்களை கலந்துரையாடலுக்கு அழைத்துள்ளார்.

இதன்போது மாவட்ட அபிவிருத்திக்குழுக்களின் தலைவர்களுக்கான அதிகாரங்கள் தொடர்பில் பேசப்படவுள்ளன.இதன்போது டக்ளஸ் தனது பிரச்சினையை எழுப்புவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.