கிராமப்புறங்களில் அசைவ உணவை சமைத்துக் கொண்டு மதியம் உச்சி வெயிலின் போது வெளியூருக்கு பயணம் செய்யநேர்ந்தால் அதற்குமுன் அந்த கறிசமைத்த பாத்திரத்தின் மேல் கொஞ்சம் அடுப்புக்கரித்துண்டுகளை அள்ளிப்போட்டுக்கொண்டு செல்வதைப் பார்த்திருப்போம். உச்சிவெயில் நேரத்தில் (இராகுகாலம்) ஏதாவது காத்து கருப்பு அடித்து விடும் என்று கூறுவார்கள். காத்துக்கருப்பு உள்ளே வரக்கூடாது என்பதற்காக வீடுகளின் வாசலில் கூட இந்த கரித்துண்டுகளை மிளகாயுடன் சேர்த்து தொங்கவிட்டிருப்பார்கள். காரணம் ஒரு கருப்பு இன்னொரு கருப்பை எதிர்க்கும் என்பதுதான். வீடுகளில் நமது முன்னோர்கள் யாராவது இறந்துவிட்டால் அவர்களது நேரடி இரத்தசொந்தமான அந்த வீட்டின் தலைமகன் மொட்டையடிப்பதைப் பார்த்திருப்போம். இறப்பிற்குப்பின் அந்த முன்னோர்களது நினைவலைகளை உச்சந்தலையில் உள்வாங்குவதற்காகவே அவ்வாறு செய்வார்கள். ஆண்டுக்கு ஒருமுறை நமது குலதெய்வக் கோயிலுக்கு சென்று மொட்டையடித்து, ஆடு, கோழி இரத்தபலி கொடுத்து நமது முன்னோரான கருப்பனின் தாகத்தை தணிப்பதை இன்றைக்கும் நாம் காணலாம். முருகன் கோயில்களில் மொட்டையடிக்கும் வழக்கம் கூட இதனால்தான் வந்தது. ஏனெனில் முருகன் கோயில்களில் சித்தர் சமாதிகள் மட்டுமே இருக்கும். தனது ஆசைகளை முற்றும் துறந்து, மக்களுக்கு நன்மை செய்யவேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் வீடுபேறு அடைந்த சித்தர்கள் தங்களது இறப்பிற்குப்பின் கருப்பாக மாறியிருப்பார்கள். இது ஏறக்குறைய இசுலாமிய தர்கா வழிபாட்டை ஒத்தது. நாம் ஆடு, கோழி, எருமை போன்றவைகளை பலியாக கொடுத்து கருப்பின் தாகத்தை தீர்க்கிறோம். இசுலமியர்களோ அவர்கள் தங்கள் உடலில்இருந்தே நேரடியாக இரத்தத்தை பலியாக கொடுத்து கருப்பின் தாகத்தை அடக்குகின்றனர். அவ்வளவுதான் வித்தியாசம். முருக (தர்கா) வழிபாட்டில் சங்ககாலம்வரை சேவல் பலிகொடுத்திருக்கிறார்கள். கருப்பை (அல்லாவை) கருப்புநிறம் எதிர்க்கும் என்பதால் அந்த முன்னோர் அலையை ஈர்க்க இசுலாமியர்கள் வெள்ளை நிறக்குல்லாவை அணிகிறார்கள். மெக்கா என்னும் தர்காவில் இசுலாமியர்கள் மொட்டையடிப்பது மேலும் கூடுதல் தகவல். இன்னும் சொல்லப்போனால் கருப்புவழிபாட்டை நம்மைவிட மிகச்சிறப்பாகவும், துல்லியமாகவும் கடைபிடிப்பவர்கள் இசுலாமியர்களே. கருப்புவழிபாடு, அல்லா வழிபாடு இரண்டுமே உருவமில்லா வழிபாடுகள்.
எழிலன்