கொரானா முடக்கம், காப்பரேட்டுகளுக்கு கைமாறும் இந்திய வளங்கள்

69

தக்காளி வாங்கப் போறவன் மேல தடியடி நடத்துறது, தாயக்கட்டை விளையாடுறவனை ட்ரோன் விட்டு மிரள வைக்கிறதுன்னு… நம்மளை விதம்விதமா டார்ச்சர் பண்ணிட்டு… அந்தப் பக்கம் என்னென்ன வேலை பண்றாங்க?

நாடு லாக்டவுன்ல இருக்கி இந்த ஏப்ரல் மாசத்துல மட்டும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பல்வேறு குழுக்கள் பலமுறை கூடி பல முக்கிய; சர்சைக்குரிய திட்டங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

Expert appraisal committee (EAC), வீடியோ கான்ஃப்ரஸிங் வழியா 9 கூட்டங்கள் நடத்தியிருக்கு. இதுல சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கக்கூடும் என்ற மக்கள் அஞ்சக்கூடிய பல சுரங்க திட்டங்கள், கட்டுமான திட்டங்களுக்கு சத்தமே இல்லாம அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

922 கோடி ரூபாய் செலவில் தற்போது இருக்கும் நாடாளுமன்ற கட்டிடத்தை புதுப்பிப்பது மற்றும் விரிவுபடுத்துவது திட்டத்திற்கு அனுமதி..

இந்த லாக்டவுன் காலத்தில் இருமுறை வீடியோ கான்பரன்சிங் வழியாக கூடியுள்ள Forest Advisory Council, (FAC), அருணாச்சலப் பிரதேசத்தின் பல்லுயிர்ச்சூழல் நிறைந்த மழைக்காடுகளை அழித்து, 1150 ஹெக்டேர் பரப்பளவில் உருவாக்கப்படும் Etalin hydropower projectக்கு அனுமதி…

தெலுங்கானாவின் Nallamala என்ற இடத்தில் யுரேனியம் சுரங்க திட்டத்துக்கு அனுமதி..

ஒருமுறை வீடியோ கான்ஃபரன்ஸ் வழியாக கூடியது The National Board for Wildlife. அந்த ஒரு கூட்டத்தில் நாடு முழுவதும் 34 சுரங்க மற்றும் கட்டுமான திட்டங்களுக்கான அனுமதி குறித்து விவாதித்து பரிந்துரைத்துள்ளது. அஸ்ஸாம் மாநிலத்யின் Dehing Patkai Elephant Reserve காட்டில் சுரங்கம் தோண்டும் திட்டம் ஒன்றும் இதில் அடக்கம்.

  • பாரதி தம்பி