யாழில் இன்றிலிருந்து மூன்று நாட்களுக்கு டெங்கு கட்டுப்பாட்டு வாரம்…

65

யாழில் இன்று 08 திகதி முதல் டெங்கு கட்டுப்பாட்டு வாரமாக 03 நாட்களுக்கு மேற்கொள்ளப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தில் டெங்கு நோய்யின் தாக்கம் அதிகரித்து வருகின்ற காரணத்தினால் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கையானது யாழ் மாவட்டத்தில் உள்ள அனைத்து சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் மேற்கொள்ள வேண்டிய நிலை இருப்பதால் இன்றில் இருந்து 03 நாட்களுக்கு டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என யாழ் சுகாதார சேவையினர் தெரிவித்துள்ளனர்.

வீடுகள், வெற்றுக் காணிகளில் டெங்கு நோய் பரவக்கூடிய சூழலை வைத்திருப்போருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கைகள் மே‌ற்கொ‌ள்ள‌ப்படு‌ம் எ‌ன்று‌ம் இவ் டெங்கு வாரத்தில் சுகாதாரத்துறையினர், பொலிஸார் மற்றும் பிரதேச செயலக ஊழியர்கள், பிரதேச சபையினர்களும் ஈடுபடுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளனர்.

டெங்கு நோய் தாக்கம் காரணமாக இவ்வருட அரையாண்டு காலப் பகுதியில் யாழ் மாவட்டத்தில் 2200 மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்று மேலும் தெரிவித்துள்ளனர்.