இன்று சங்கானை பொது வைத்தியசாலை, டெங்கு அபாய வலயங்களாக உள்ள இடங்களை சுற்றி வளைத்து புகையூட்டும் செயற்பாடுகள் சுகாதார பரிசோதகர், மேற்பார்வையாளரின் வழிகாட்டலில் முன்னெடுக்கப்பட்டது.
வலிகாமம் மேற்கு பிரதேசத்தில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கு முன்னெச்சரிக்கையாக சுகாதாரத்துறையினர் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
பொது மக்கள் விழிப்புணர்வுடன் தமது அறிவுறுத்தல்களை நடைமுறைப்படுத்தினால் டெங்கு நோயை இலகுவாக கட்டுப்படுத்தி விடலாம் என சுகாதாரத்துறையினர் கூறுகின்றனர்.
மேலும் உங்கள் சுற்றாடலில் காணப்படும் நீர் தேங்கு பொருட்களை உரப்பையில் கட்டி தெருவில் வைப்பதுடன் உங்கள் சுற்றாடலில் நீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்ளுமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்கின்றனர்.
– Babugi