கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு : கூலாக அறிவித்த தோணி

159

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து முற்றாக ஓய்வு பெறுவதாக இந்திய அணி முன்னாள் தலைவர் தோணி அறிவிப்பு,கடந்த இங்கிலாந்தில் நடந்த உலக கிண்ண போட்டியே இவரின் கடைசி போட்டியாக அமைந்துள்ளது.ராஞ்சியில் சாதாரண குடும்பத்தில் இருந்து மிகுந்த போராட்டத்தின் பின்னர் இந்தியணியில் இடம்பிடித்த தோணி,பின்னர் கப்டனாகி,T/20 உலக கிண்ணத்தை வென்று கொடுத்தார்.பின்னர் 2011 உலக கிண்ணத்தை பெற்று கொடுத்துள்ளதுடன்,ஐபிஎல் போட்டிகளிலும் சென்னை அணிக்கு கிண்ணம் பெற்று கொடுத்துள்ளார்.கிரிக்கெட் வரலாற்றில் மிகசிறந்த ஒரு கேப்டனாக தோணி விளங்குகின்றார்.

சில வருடங்கள் முன்பு,தோணி வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட்டமையும் குறிப்பிடதக்கது.தோணி தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.